சென்னை: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட 15 செயலிகளை உடனடியாக அவர்கள் போனில் இருந்து டெலிட் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
McAfee எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வினை நடத்தியது. அதில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் போலியான கடன் செயலிகள் உலா வருவதை கண்டறிந்துள்ளது. இந்த கடன் செயலிகளை நமது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால் நம் போனில் இருக்கும் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திருடி ஹேக்கர்களுக்கு இவை அனுப்பி வைப்பதாக McAfee நிறுவனம் தெரிவித்துள்ளது.

McAfee நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் உலகிலேயே போலியான செயலிகளை டவுன்லோட் செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதாம். மக்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இத்தகைய போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களுடைய தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர் என McAfee நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக கடன் செயலிகள் பெயரில் தான் இத்தகைய மோசடிகள் பெரும்பாலும் நிகழ்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் வழங்கும் செயலிகளை ஒருவர் பதிவிறக்கம் செய்யும்போது கடன் வாங்குவதற்காக அவர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை அதில் வழங்குகிறார்கள். இந்த தகவல்களை ஹேக்கர்கள் பயன்படுத்திக்கொண்டு வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடுகின்றனர். அந்த வகையில் McAfee நிறுவனம் 15 போலியான கடன் செயலிகளை கண்டறிந்துள்ளது.
கிட்டத்தட்ட இந்தியாவில் இந்த 15 போலி கடன் செயலிகளையும் 8 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி இருக்கிறார்களாம். இவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் இந்த செயலிகள் வாயிலாக திருடப்பட்டுள்ளன என McAfee நிறுவனம் கூறியுள்ளது.
Préstamo Seguro-Rápido, seguro
Préstamo Rápido-Credit Easy
ได้บาทง่ายๆ-สินเชื่อด่วน
RupiahKilat-Dana cair
ยืมอย่างมีความสุข – เงินกู้
เงินมีความสุข – สินเชื่อด่วน
KreditKu-Uang Online
Dana Kilat-Pinjaman kecil
Cash Loan-Vay tiền
RapidFinance
PrêtPourVous
Huayna Money
IPréstamos: Rápido
ConseguirSol-Dinero Rápido
ÉcoPrêt Prêt En Ligne
இந்த போலி செயலிகளை ஒருவரது போனில் இன்ஸ்டால் செய்யப்படும் போது கால் ஹிஸ்டரி ,மெசேஜ்கள், கேமரா ,மைக்ரோஃபோன் ,லொகேஷன் ஆகியவற்றை அணுகும் அனுமதியை கொடுக்கின்றனர். அவசர தேவைக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக மக்கள் இதன் பின்விளைவுகளை புரிந்து கொள்ளாமல் இத்தகைய அனுமதியை வழங்கி விடுகின்றனர் என இந்த துறை சார்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மெசேஜ்களுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் மக்கள் ஓடிபி உள்ளிட்ட மெசேஜ்களையும் திருடுவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றனர். ஒருவேளை இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக அவற்றை நீக்கம் செய்து விட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் அண்மை காலமாகவே ஆன்லைன் சம்பந்தப்பட்ட நிதி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளும் போலியாக இருக்கின்றன என்பதால் மக்கள் மிக கவனமாக தங்களுடைய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications