உலகின் மிகப்பெரிய கன்சல்டிங் சேவை நிறுவனமான McKinsey & Co டெக் நிறுவனங்களைப் போலவே அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைத்து ரெசிஷனில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது.
இதுநாள் வரையில் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவன ஊழியர்கள் தான் அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பிற துறை நிறுவனங்களையும் ரெசிஷன் அச்சம் பாதித்து வருகிறது.
இதன் வாயிலாக உலகின் மிகப்பெரிய கன்சல்டிங் சேவை நிறுவனமான McKinsey & Co சுமார் 2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக ப்ளூம்பெர்க் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டு உள்ளது.
McKinsey & Co நிறுவனம்
உலகின் மிகப்பெரிய கன்சல்டிங் சேவை நிறுவனமான McKinsey & Co நிறுவனம் தற்போது திட்டமிட்டு உள்ள 2000 ஊழியர்கள் பணிநீக்கத்தில் தனது வாடிக்கையாளர் உடன் நேரடி தொடர்பில் இல்லாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கன்சல்டிங் சேவை நிறுவனம்
McKinsey சர்வதேச அளவில் பல திட்டங்களுக்கு நிறுவனங்களுக்குத் தரவுகளை திரட்டி ஆலோசனை செய்யும், இதில் பணிநீக்கம் குறித்த அட்வைஸ்-ம் அடக்கம். ஆனா இப்போ McKinsey நிறுவனமே பணிநீக்கம் செய்வது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
சப்போர்ட் டீம்
இதுகுறித்து McKinsey நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் 10 வருடத்திற்கு அதிகமான காலத்தில் வாடிக்கையாளர் உடன் நேரடியாகத் தொடர்பில் இல்லாத சப்போர்ட் டீம்-ஐ மறுசீரமைப்பு செய்யவில்லை, முதல் முறையாக ரீடிசைன் செய்ய உள்ளோம் இதன் மூலம் நிறுவனத்தின் செயல்திறன் மேம்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
புராஜெக்ட் மாக்னோலியா
McKinsey & Co நிறுவனத்தின் பணிநீக்கம் புராஜெக்ட் மாக்னோலியா-வின் ஒரு பகுதியாகும், இந்த திட்டம் வாயிலாகவும், பணிநீக்கம் வாயிலாகவும் இதன் கூட்டணி நிறுவனங்களுக்கான இழப்பீட்டுத் தொகுப்பைப் பாதுகாக்க உதவும் என்று நம்புகிறது. மெக்கின்சி நிறுவனம் சப்போர்ட் அணியில் இருக்கும் சில முக்கியமான பதவிகள், அணிகளை மறுசீரமைப்பு செய்து சென்டரலைஸ் முறையில் இயக்க முடியும் என்பதை ஆய்வு செய்து வருகிறது.
KPMG நிறுவனம்
மெக்கன்சி நிறுவனத்தைப் போல் கடந்த மாதம் KPMG நிறுவனம் அமெரிக்காவில் அதன் மொத்த ஊழியர்களில் சுமார் 2 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகின் மாபெரும் 4 பெரிய அக்கவுன்டிங் நிறுவனங்கள் அறிவித்த பணிநீக்கமாக உள்ளது.


Click it and Unblock the Notifications