ஐதராபாத்: அம்பானி, அதானி, டாடா, கௌதம் சிங்ஹானியா, பூனாவல்லா இவர்கள் எல்லாம் இந்தியாவில் பிரபலமான பெரும் பணக்காரர்கள் மட்டுமல்ல தங்களது சொகுசு கார்களுக்கு பெயர் போனவர்கள், ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி லம்போர்கினி, பென்ஸ் போன்ற உயர் ரக சொகுசு கார்களை தங்கள் வீட்டு கார் நிறுத்தங்களில் அடுக்கி வைத்திருப்பவர்கள் இந்த தொழிலதிபர்கள்.
ஆனால் இந்தியாவில் இவர்களிடம் இல்லாத அரிதான ஒரு கார் வேறு ஒருவரிடம் இருக்கிறது என்ற தகவல் வெளியாகிறது.மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் இந்த காரின் மதிப்பு ரூ. 12 கோடி ஆகும்.

இது இந்தியாவில் ஒரே ஒரு தொழிலதிபரிடம் மட்டுமே இருக்கிறது. அவர் அனில் அம்பானியோ, முகேஷ் அம்பானியோ, அதானி குடும்பத்தையோ அல்லது டாட்டா குடும்பத்தையோ சேர்ந்தவர் கிடையாது. ஹைதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலதிபரும் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சுருமான நசீர் கானுக்கு சொந்தமானது. இந்தியாவிலேயே இந்த காரை வைத்திருக்கும் ஒரே நபர் இவர் தான்.
நசீர் கானுக்கு சொகுசு கார்களை வாங்கி பயன்படுத்துவது என்பது மிகவும் பிடித்தமான ஒரு செயல்.அந்த வகையில் இவர் தன்னுடைய கார்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவிடுவார் இதன் காரணமாகவே இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்தியாவில் இவர் ஒருவரிடம் மட்டுமே மெக்லாரன் 765 எல்டி ஸ்பைடர் கார் இருக்கிறது. மிகவும் வேகமாக செல்லக்கூடிய மற்றும் மிகவும் விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று .இந்த கார் ஒரு மணி நேரத்தில் 330 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
அதுமட்டுமின்றி நசீர் கான் சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் கார்களை வாங்கி குவித்து வைத்துள்ளார். ஃபெராரி ரக கார்கள் -3, லம்போர்கினி ரக கார்களில் -3, ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் - 2, மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் -2, ஃபோர்டு முஸ்தாங்க் -1 மற்றும் பல ஸ்போர்ட்ஸ் , சொகுசு கார்களை இவர் வாங்கி வைத்துள்ளார்.
அம்பானி குடும்பத்தினருக்கு முன்னதாகவே ரோல்ஸ் ராய்ஸின் களிநான் பிளாக் பேட்ச் வகை காரை வாங்கியவர் நசீர் கான். நசீர் கான் இடம் தற்போது 20க்கும் அதிகமான சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. இவற்றின் வீடியோக்களையும், படங்களையும் அவர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவார்.
நசீர் கானின் தந்தை முகமது நசாருதின் கிங்ஸ் குரூப் ஆஃப் நிறுவனங்களின் தலைவர் ஆவார். கிங்ஸ் குரூப் என்பது ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நசீர் கான் செயல்பட்டு வருகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications