தங்கம், வெள்ளியை விடுங்க.. இனி எம்சிஎக்ஸில் நேச்சுரல் ரப்பரும் உண்டு.. விவரங்கள் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய காமடிட்டி வர்த்தகத்தில் இயற்கை ரப்பர் ப்யூச்சர் வர்த்தகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் தற்போது நான்கு வகையான கான்ட்டிராக்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று ஜனவரி 2021, பிப்ரவரி 2021, மார்ச் 2021, ஏப்ரல் 2021 ஆகும்.

இந்த நான்கு வகையான கான்ட்டிராக்டுகளிலும் தற்போது வர்த்தகம் செய்து கொள்ளலாம். ப்யூச்சர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இயற்கை ரப்பர் சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது.

தேவை அதிகம்

தேவை அதிகம்

இது ரப்பருக்கு சந்தையில் அதிக தேவை உள்ள நிலையில், ப்யூச்சர் வர்த்தகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நடுத்தர உற்பத்தியாளர்கள், நுகர்வோர், மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிறந்த ஹெட்ஜிங் ஆக பயன்படுத்த முடியும். இதனுடைய எக்ஸ்பெய்ரி டே மாதம் ஒரு முறையாகும்.

டிக் சைஸ் எவ்வளவு?

டிக் சைஸ் எவ்வளவு?

இது ஒரு யூனிட்டுக்கு 1000 கிலோ எடையிருக்கும். எனினும் இதன் (base value) ஒரு ரூபாய் அதிகரித்தால் 100 ரூபாய் லாபம் ஆகும். இதனுடைய டிக் சைஸ் குறைந்தபட்சம் ஒரு ரூபாயாகும். இது இறக்குமதி மற்றும் உற்பத்தி மற்றும் அதன் உலகளாவிய இணைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் விலை இருக்கும்.

சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும்
 

சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும்

இந்தியாவில் இயற்கை ரப்பருக்கான மிகப்பெரிய சந்தை அளவைக் கருத்தில் கொண்டு, ரப்பரை ப்யூச்சர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த சந்தையில் விலை அபாயத்தை நிர்வகிப்பதற்கான திறமையான ஹெட்ஜிங் ஆக இருக்கும் என்று எம்சிஎக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான பிஎஸ் ரெட்டி கூறியுள்ளார். இதற்கிடையில் அதன் பியூச்சர் வர்த்தகத்தின் அக்யூமன் கேபிடல் சந்தையானது இயற்கை ரப்பரில் முதல் வர்த்தகத்தினை மேற்கொண்டுள்ளது.

பயன்கள்

பயன்கள்

இந்த ரப்பர் மரத்தின் பெயர் ஹெவியா ப்ராசிலியென்சிஸ், இந்த ரப்பர் காலணிகள், தொப்பிகள், கோட்டுகள், லைஃப் ஜாக்கெட்டுகள், சைக்கிள், கார் டயர் தயாரிப்பு தவிர, தொழிற்சாலைகளில் தானியங்கி தொழில்நுட்பத்துக்கான பட்டைகள் உற்பத்தி உள்ளிட்ட பல இடங்களில் பயன்பட்டு வருகின்றது. இது மின்சாரம் கடத்தும் தன்மை அற்றதானதால், மின் கம்பிகளின் வெளிப்புறம் பயன்படுத்தப்படுகிறது.

தேவை நிச்சயம் அதிகரிக்கும்

தேவை நிச்சயம் அதிகரிக்கும்

இந்த மரங்களிலிருந்து வரும் ரப்பரில் முக்கால்வாசி பகுதி வாகன டயர் உற்பத்திக்குத்தான் பயன்படுகிறது. ஆக எந்த அளவுக்கு நாம் வாகன மற்றும் விமானங்கள் உற்பத்தியை அதிகரிக்கிறோமோ, அந்த அளவுக்கு ரப்பரின் தேவையும் அதிகரிக்கும். இதன் கொள்முதல் சர்ச்சைக்குள்ளாவதும் தவிர்க்கமுடியாததே என்கிறது ஒர் ஆய்வு. இப்படி, பல பொருட்களுக்கு ரப்பர் தேவைப்படுவதோடு மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாததாகவும் ஆகிவிட்டது. இதனால் இதற்கு தேவை மிக அதிகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rubber ரப்பர்
English summary

MCX launches future trading in natural rubber

MCX latest updates.. MCX launches future trading in natural rubber
Story first published: Monday, December 28, 2020, 20:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X