அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அரபு நாடுகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. அரபு நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகங்கள் மற்றும் பெரிய பெரிய கட்டிடங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி வருகிறது மற்றொருபுறம் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அரபு நாடுகளில் நடக்கக்கூடிய இந்த தாக்குதல் இந்தியர்களுக்கு பெரிய கவலை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஏனென்றால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை மார்க்கமாக அரபு நாடுகளில் தங்கி இருக்கிறார்கள். இந்த சூழலில் ஈரான் போர் அவர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தாயகத்தில் வசிக்கக்கூடிய அவர்களுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் அங்கே தங்கியிருப்பவர்களின் நிலை குறித்து வருத்தப்பட தொடங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய தூதரகங்கள் வழியாக எடுத்து வருவதாக மத்திய அரசு உறுதி அளித்து இருக்கிறது . மத்திய வெளிப்புறத் துறை அமைச்சகம் மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நடைபெறக்கூடிய இந்த போர் சூழலில் சிக்கியிருக்க கூடிய இந்தியர்களின் உதவிக்காக கட்டுப்பாட்டு அறைகளை தொடங்கியிருக்கிறது.
மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்காசிய மற்றும் அரபு பிராந்தியத்தின் தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறைகள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே பாதிக்கப்பட்ட நாடுகளில் இருக்கும் இந்தியர்களும் அவர்களின் உறவினர்களும் பின்வரும் எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம்:
1800118797 (toll-free)
+91 11 23012113
+91 11 23014104
+91 11 23017905
அதேபோல இந்த பிராந்தியங்களில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்வதற்கான அவசர தொடர்பு எண்களையும் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.
பஹ்ரைன் : +973 39418071
ஈரான் : +989128109115 / +989128109102 / +989128109109 / +989932179359
ஈராக்: +964 771 651 1185 / +964 770444 4899
இஸ்ரேல்: +972 54 7520711 / +972 54 2428378
ஜார்டன்: +962 770 422 276
குவைத்: +965 65501946
லெபனான்: +961 76860128
ஓமன்: +968 98282270 (WhatsApp) / 80071234 (toll-free)
கத்தார்: +974 55647502
பாலஸ்தீனம்: +970 592916418
சவுதி அரேபியா (ரியாத்): +966 11 4884697 / 800 247 1234 (toll-free)
சவுதி அரேபியா (ஜெட்டா): +966 126648660 / +966 12 2614093
ஐக்கிய அரபு அமீரகம் (UAE): +971 543090571 (WhatsApp) / 800 46342 (toll-free)
இந்த எண்களை தொடர்பு கொண்டு மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என அரசு கூறியுள்ளது. மேற்கு ஆசியா பிராந்தியத்தில் நடைபெற்று வரக்கூடிய போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் வெளியுறவு துறை அமைச்சக்ம் தெரிவித்துள்ளது. இந்த பிராந்தியத்தில் தங்கி இருக்கக்கூடிய இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை என அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

மோடியின் திடீர் அவசர CCS கூட்டம்.. எதற்காக ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்..? என்ன நடந்தது..?!

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஈரான் போரால் தலைதூக்கும் புது பிரச்சனை..!! இந்திய மக்களுக்கு அடுத்தடுத்த சிக்கல்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!



Click it and Unblock the Notifications