ஊழியர்களுக்கு 3 பெட்ரூம் வீட்டை போனஸாக கொடுக்கும் 'நல்ல' முதலாளி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாகவே அனைத்து நிறுவனங்களும் திறமையான ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், அதிக வர்த்தக இலக்கை அடையவும் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுப்பது வழக்கம்.

இந்தியாவில் தீபாவளி போனஸ், பொங்கல் போனஸ் போன்றவை சிறு நிறுவனங்களில் கொடுக்கப்பட்டதாலும், பெரும்பாலான நிறுவனத்தில் ஊழியர்களின் லேலை திறன் மற்றும் ஊழியர்களைத் தக்க வைப்பதற்காகவே போனஸ் ஆகப் பணம் கொடுக்கப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் முதலாளி கொஞ்சம் வித்தியாசம்.

 eShram: கூலி வேலை முதல் சுயதொழில் வரை.. அனைவருக்கும் 2 லட்சம் இன்சூரன்ஸ்.. சூப்பர் திட்டம்..! eShram: கூலி வேலை முதல் சுயதொழில் வரை.. அனைவருக்கும் 2 லட்சம் இன்சூரன்ஸ்.. சூப்பர் திட்டம்..!

 மெக்கானிக்கல் ஓன்

மெக்கானிக்கல் ஓன்

அமெரிக்காவின் புளோரிடா-வை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெக்கானிக்கல் ஓன் என்ற நிறுவனம் ஏசி மற்றும் பிளம்பிங் சேவைகளைப் புதிய கட்டிடங்களுக்கு அளித்து வருகிறது. மெக்கானிக்கல் ஓன் நிறுவனத்தின் தலைவர் போனஸ் அறிவிப்பு பின்பு உலகளவில் பிரபலமாகியுள்ளார்.

 ஜேசன் ஜேம்ஸ்

ஜேசன் ஜேம்ஸ்

இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ-வான ஜேசன் ஜேம்ஸ் ஊழியர்களைப் புதிதாகப் பாராட்ட வேண்டும் என நினைத்த காரணத்தால் இரண்டு புதிய வீடுகளை எவ்விதமான கடன் சுமையும் இல்லாமல் நிறுவனம் சிறந்த ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

 ஊழியர்கள் தான் எல்லாம்

ஊழியர்கள் தான் எல்லாம்

இதுகுறித்து ஜேசன் ஜேம்ஸ் கூறுகையில் எங்களுடைய வர்த்தக மாடலே இது தான், நிர்வாகம் ஊழியர்களைச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டால், ஊழியர்களை நிறுவனத்தைச் சிறப்பாகப் பார்த்துக்கொள்வார்கள். இது கட்டாயம் பலன் அளிக்கும் என்பதை ஜேசன் ஜேம்ஸ் நம்புகிறார்.

 3 பெட்ரூம் வீடு

3 பெட்ரூம் வீடு

ஊழியர்கள் நலனுக்காகவும், பாராட்டுவதற்காகவும் ஜேசன் ஜேம்ஸ் 3 பெட்ரூம் மற்றும் 2 பாத்ரூம் கொண்ட 2 வீட்டை வாங்கியுள்ளார், இதோடு 5,00,000 டாலர் மதிப்பிலான நிதியை புதிய திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

 ஊழியர்களிடம் சொந்த வீடு இல்லை

ஊழியர்களிடம் சொந்த வீடு இல்லை

ஜேசன் ஜேம்ஸ் கார் அல்லது சுற்றுலா திட்டத்தைத் தான் முதலில் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும் எனத் திட்டமிட்டார், ஆனால் பல ஊழியர்கள் சொந்த வீடு இல்லாமல் இருந்தது தெரிய வந்த நிலையில், ஜேசன் ஜேம்ஸ் 2 புதிய வீட்டை ஊழியர்களுக்குப் போனஸ் கொடுப்பதற்காக வாங்கியுள்ளார்.

கண்டிஷன்

கண்டிஷன்

இந்த வீட்டை வெல்லும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால் நிறுவனத்தில் முழு ஆண்டுப் பணியாற்றியிருக்க வேண்டும், நிறுவனம் நடத்தும் நிதி கல்வியறிவு வகுப்பு முழுமையாகப் பூர்த்தி செய்திருக்க வேண்டும், 20 மணிநேரம் கம்யூனிடி பணிகள் செய்திருக்க வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே ஊழியர்கள் வீடு வெல்லும் வாய்ப்பை பெறும் தேர்வு பட்டியலுக்குள்ள நுழைவார்கள்.

 100 ஊழியர்கள்

100 ஊழியர்கள்

மெக்கானிக்கல் ஓன் நிறுவனம் ஜூலை மாதத்தில் இருந்து சுமார் 100 ஊழியர்களை வைத்து இயங்கி வருகிறது. இதுவரை எந்த ஒரு ஊழியரும் வீடுகளை வெல்லும் தேர்வு பட்டியலுக்குள் நுழையவில்லை என ஜேசன் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வுக்கான முடிவுகளை டிசம்பர் 4, 2022ல் நிறுவன ஊழியர் சந்திப்பில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 ஊழியர்கள் வெளியேற்றம்

ஊழியர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவில் தற்போது ஊழியர்கள் அதிகளவில் தங்களது பணியை விட்டு வெளியேறுகின்றனர். இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதைச் சமாளிக்க நிறுவனங்கள் பல முயற்சிகள் செய்து வரும் நிலையில் மெக்கானிக்கல் ஓன் ஊழியர்களுக்கு வீட்டை கொடுக்க முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mechanical One CEO giveaway two 3 Bedroom flats as bonus to Employees

Mechanical One CEO giveaway two 3 Bedroom flats as bonus to Employees ஊழியர்களுக்கு 3 பெட்ரூம் வீட்டை போனஸ் ஆகக் கொடுத்த 'நல்ல' முதலாளி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X