ஒவ்வொரு வருடமும் உயிரை கொடுத்து பணியாற்றும் சமானிய ஊழியர்கள் 10 முதல் 15 சதவீத சம்பள உயர்வை பெறுவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. இந்த நிலையில் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கும் சிஇஓ சம்பளம் மட்டும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் சிஇஓ-க்களுக்கும் ஊழியர்களுக்குமான மீடியன் பே விகிதம் பெரும் வித்தியாசம் இருப்பது பெரும் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிஇஓ-க்கள் மத்தியிலான சம்பள தொடர்பாக முக்கியமான ஒரு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது, இதில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெலாய்ட் நிறுவனம் இந்தியாவில் நடத்திய எக்ஸ்கியூட்டிவ் பர்பாமென்ஸ் மற்றும் ரிவார்ட்ஸ் கணக்கெடுப்பின் ஐந்தாம் வருட அறிக்கையில், இந்திய CEOக்களின் சம்பளத்தில் ஏற்பட்டு உள்ள உயர்வை புட்டு புட்டு வைத்துள்ளது.
2024ம் ஆண்டில், இந்திய CEO-க்களின் மீடியன் சம்பளம் அதாவது சராசரி சம்பளம் ரூ.9.3 கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் அது வெறும் ரூ.6.9 கோடியாக இருந்தது, இதன் மூலம் 35 சதவீத உயர்வைக் பதிவு செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2020ம் ஆண்டில் இந்திய CEOக்களின் சராசரி சம்பளம் ரூ.9.8 கோடியாக இருந்தது. இந்த அளவீடு 2024ல் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, அதிகப்படியான சம்பளம் வாங்கும் CEOக்கள் இக்காலகட்டத்தில் உருவான காரணத்தால் 2024ம் ஆண்டில் CEO-க்களின் சராசரி சம்பளம் ரூ.13.8 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 40 சதவீத உயர்வைக் காட்டுகிறது.
இந்த ஆய்வில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும், அதன் சிஇஓ-க்களின் சம்பளத்தைக் கணக்கில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதேபோல் பல துறை, பல கட்ட நிறுவன வளர்ச்சி நிலைகளில் உள்ள நிறுவனங்களையும் உள்ளடக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் பொது துறை நிறுவனங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வருவாயைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
2024ம் ஆண்டில், இரண்டில் ஒரு CEOக்கும் ரூ.10 கோடிக்கு அதிகமான சம்பளத்தை பெற்று வருகின்றனர், 2020ல் ஆண்டில் இந்த நிலை மூன்றில் ஒரு CEO 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை வாங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications