இன்றைய வாழ்க்கை முறையில் மருத்துவ காப்பீடு எந்த அளவுக்கு முக்கியம் என அனைவருக்கும் தெரியும், இதை உழைக்கும் மக்களுக்கு, வயதானவர்களுக்கு மட்டுமே கிடைப்பதை தாண்டி எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் கல்லூரி மாணவர்களுக்கு மலிவான தொகையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக மகாராஷ்டிரா அரசு சிறப்பான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா அரசு அக்டோபர் 16 அன்று வெளியிட்ட உத்தரவின் படி, ஒரு இளங்கலை மாணவர் மற்றும் ஒரு பாதுகாவலர் இப்போது மருத்துவ மற்றும் விபத்துக் காப்பீட்டை வெறும் 20 ரூபாய் முதல் 422 ரூபாய் வரையிலான பிரீமியம் தொகையை செலுத்தத் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை வெளியிட்ட அரசுத் தீர்மானத்தில், அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காப்பீட்டுத் திட்டம் பெற தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Accidental Insurance Cover: மகாராஷ்டிரா அரசின் அறிவிப்பின் படி ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கான 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகை பாதுகாப்பை பெற வெறும் 20 ரூபாய் செலுத்தினால் போதுமெனவும், 62 ரூபாய் செலுத்தினால் 5 லட்சம் ரூபாய் வரையில் கவரேஜ் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
Medical Coverage: இதேபோல் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்கு பயன்படும் வகையில் 2 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டுத் தொகை பாதுகாப்பை பெற்ற வருடத்திற்கு வெறும் 422 ரூபாய் ப்ரீமியம் தொகையை செலுத்தினால் போதுமென இந்த உத்தரவில் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
Primary Insured Member: இத்திட்டத்தின் மூலம் பலன் பெறும் முதன்மை காப்பீடு உறுப்பினர், மகாராஷ்டிராவின் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் இணைக்கப்பட்ட, தொடர்புடைய, நிர்வகிக்கப்படும், வகைப்படுத்தப்பட்ட கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவராக இருக்க வேண்டும்.
இரண்டாம் நிலை காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர் ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலராக இருப்பார். இதை கல்லூரி சேர்க்கை அல்லது சேர்க்கை படிவத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதன் பிடி உறுதி செய்து, இத்திட்டத்தின் பலன்களை அனுபவிக்க முடியும் என மகாராஷ்டிரா அரசு கூறியது.
இந்த முக்கியமான திட்டத்திற்காக மகாராஷ்டிரா அரசு ICICI Lombard Insurance மற்றும் National Insurance ஆகிய நிறுவனங்களை இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஐசிஐசிஐ லாம்பார்ட் நிறுவனம் 20 ரூபாயில் 1 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடும், 422 ரூபாயில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடும் வழங்குகிறது. நேஷ்னல் இன்சூரனஸ் 62 ரூபாயில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடுகளை வழங்க உள்ளது.
ஆனால் இந்த மருத்துவ கப்பீடு மற்றும் விபத்து காப்பீடு ஆகியவை தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியால் ஏற்படும் மரணம், கர்ப்பம் அல்லது பிரசவம், மோட்டார் சைக்கிள் பந்தையம் மற்றும் சாகச விளையாட்டுகளில் பங்கேற்பது, உள்நாட்டுப் போர் உள்ளிட்ட போர் காரணங்கறள், நக்சலைட்டுகளின் தாக்குதல் தவிர பயங்கரவாத தாக்குதல், மது மற்றும் பிற போதை பொருட்கள் பயன்பாட்டின் மூலம் ஏற்படும் விபத்து போன்ற நிகழ்வுகளில் மாணவர்களுக்கு காப்பீடு வழங்கப்படாது எனவும் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications