மத்திய அரசு நியமித்த நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 150-க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு முன்னரும் அரசு நூற்றுக்கணக்கான மருந்துகளை தடை செய்துள்ளது. காய்ச்சல் மற்றும் வலிக்கு பயன்படுத்தப்படும் பல மருந்துகள் இனி கடைகளில் கிடைக்காது. நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த மருந்துகள் சரியானவை அல்ல என்றும், அவற்றின் பயன்பாடு மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான அறிவிப்பை சுகாதார அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, காஸ்மெட்டிக்ஸ் ஆக்ட் 1940 பிரிவு 26A-இன் கீழ் சுமார் 156 மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 156 மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனை உடனடியாக நிறுத்தப்படும்.

அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளில், காய்ச்சல், வலி போன்ற பொதுவான நோய்களுக்கான சிகிச்சையில் பல மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தடை செய்யப்பட்ட மருந்துகளில் Aceclofenac 50mg + Paracetamol 125mg, Mefenamic Acid + Paracetamol Injection, Cetirizine HCL + Paracetamol + Phenylephrine HCL, Levocetirizine + Phenylephrine HCL + Paracetamol, Paracetamol + Chlorpheniramine Maleate + Phenyl Propanolamine, மற்றும் Camylofin Dihydrochloride20 ஆகியவை அடங்கும். இதுபோன்ற கலவையைக் கொண்ட மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது மேலே கூறப்பட்டுள்ள படி இரண்டு மருந்துகளை சேர்த்து உருவாக்கும் மருந்துகளுக்கு இந்தத் தடை பொருந்தும்.
paracetamol, tramadol, taurine மற்றும் caffeine ஆகிய மருந்துப் பொருட்களை கலவையாகக் கொண்ட மருந்துகளையும் சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது. இந்த கலவை வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.
சுகாதார அமைச்சகம் தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் மருந்துகளை தடை செய்து வருகிறது. முறையான சோதனையின்றி சந்தையில் வெளியிடப்பட்ட மருந்துகள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன. நிபுணர் குழு ஆலோசனையின் அடிப்படையில் அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னதாக, 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 344 மருந்துகளையும், 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 மருந்துகளையும் அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications