பிராண்டட் ரெடிமேட் ஆடைகளில் , குறிப்பாக எத்னிக் வகை ஆடைகளில் பெரும்பாலான பெண்களின் விருப்பமான பிராண்டாக இருக்கிறது Biba பிராண்ட் தான். இந்திய பெண்களில் அதிகமானோருக்கு பிடிக்கும் பிராண்டாக இருப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை.
இதேபோல் BIBA பிராண்டுக்கான வெற்றி அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை. வீட்டில் இருந்து தொடங்கப்பட்ட ஒரு தொழில் தான் தற்போது மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது.

ரூ. 8,000 முதலீட்டில் தொடக்கம்: டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மீனா பிந்த்ராவுக்கு பெற்றோர் 20 வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டனர். பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் வீட்டை பார்த்து கொள்வது மற்றும் குழந்தைகளை பராமரிப்பு என இருந்தார்.
இருப்பினும் அவருக்கு ஆடைகள் வடிவமைப்பில் ஆர்வம் இருந்து வந்தது. படிப்படியாக ஆர்வம் அதிகரித்து தன்னுடைய 40ஆவது வயதில் ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தார். அதற்கு அவரிடம் பணம் இல்லை, பேங்க் அக்கவுண்ட் கூட இல்லை.
மீனா பிந்த்ராவின் கணவர் வங்கியில் 8,000 ரூபாய் கடன் பெற்று தந்து தொழில் தொடங்க உதவினார். அப்படி 1988ல் வெறும் 8000 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது தான் Biba. முதலில் வீட்டில் இருந்த படியே துணிகளை விற்பனை செய்தார். பின்னர் 2004இல் மும்பை வணிக வளாகத்தில் Bibaஇன் முதல் கடையை திறந்தார்.
பாக்கெட் வைத்த குர்த்தாக்கள் பிரபலம்: தரமான ஆடைகள் மற்றும் டிரெண்டுக்கு ஏற்ற ஆடைகள் இங்கே கிடைத்தன. குறிப்பாக பாக்கெட் வைக்கப்பட்ட குர்தாக்கள் பெண்கள் மத்தியில் பிரபலமானது.
இதனால் அசுர வளர்ச்சி கண்ட Biba, 2012ஆம் ஆண்டு 300 கோடி என்ற வருவாயை எட்டியது.நாடு முழுவதும் Biba ஷோ ரூம்கள் பரவின. அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமாகவும் விற்பனை களைகட்டியது. இதனால் 2020இல் Biba நிறுவனம் 700 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் ஒரு ஃபேஷன் பிராண்டாக மாறியது.
தற்போது இந்தியா முழுக்க 76 நகரங்களில் 180 கடைகளை கொண்டுள்ளது. சுமார் 275 கடைகளில் Biba பிராண்டு ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இந்தி திரையுலகில் கால்பதித்துள்ள Biba நிறுவனம், பல திரைப்படங்களுநக்கான ஆடைகளையும் வழங்கியுள்ளது.
அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இந்த பிராண்டின் ஆடைகளை அணிகின்றனர் என்றால் அதன் வளர்ச்சி நமக்கு புரியும். தற்போது இந்தியாவின் கோடீஸ்வர பெண்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள மீனா பிந்த்ரா, தன்னுடைய 70 வயதிலும் அதே புத்துணர்ச்சியுடன் தன்னுடைய நிறுவன பணிகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு பெண்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
Story Written by : Devika


Click it and Unblock the Notifications