பைஜூஸ் ரவீந்திரன் கையிலிருந்த கடைசி சொத்து.. பெங்களூர் நிலம் விற்பனை.. வாங்கியது யார் தெரியுமா..?

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற பைஜூஸ்-ன் வீழ்ச்சி யாராலும் மறக்க முடியாது, கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி முறை தான் இனி எதிர்காலம் என்ற நிலையில் ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் பைஜூஸ் பயன்படுத்துவோர் இருந்த காலம் மாறி தற்போது இந்நிறுவனம் மொத்தமாக திவாலாகியுள்ளது.

இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனர் ரவிந்திரன் குடும்பத்திற்குச் சொந்தமாக ஆடம்பர வில்லா பகுதியில் வைத்திருந்த நிலத்தை விற்கப்பட்டு உள்ளது. இந்த நிலையத்தை வங்கியது யார் தெரியுமா..?

பைஜூஸ் ரவீந்திரன் கையிலிருந்த கடைசி சொத்து.. பெங்களூர் நிலம் விற்பனை.. வாங்கியது யார் தெரியுமா..?

பெங்களூரு கிழக்குப் பகுதியில் இருக்கும் பல ஆடம்பர குடியிருப்புகளில் மிகவும் முக்கியமானது இந்த ஏப்சிலான் ரெசிடென்ஷியல் வில்லாஸ், இது ஏமலூர் பகுதியில் உள்ளது.

இந்த குடியிருப்பு பகுதியில் விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, பிரிட்டானியா சிஇஓ வருண் பெரி, பேஜ் இண்டஸ்ட்ரீஸ் அசோக் என பல பெரும் புள்ளிகள் நிலத்தையும் வீட்டையும் வாங்கியுள்ளனர். இதே இடத்தில் தான் பைஜூஸ் ரவிந்திரன் தனது குடும்பத்திற்காக 2 வில்லா பிளாட்களை வாங்கியிருந்தார்.

தற்போது பெரும் நிதி நெருக்கடியில் இருக்கு ரவிந்திரன் இரு பிளாட்களையும், முன்னணி ஈகாமர்ஸ் தளமாக மீஷோ நிறுவனருக்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.

Also Read

மீஷோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான விதித் ஆத்ரே, பைஜு ரவீந்திரனின் மனைவி திவ்யா கோகுல்நாத் பெயரில் இருந்த 18,305 சதுரடி நிலத்தை சுமார் 48.11 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார், இதன் மூலம் ஒரு சதுரடி சுமார் 26,280 ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது.

மற்றொரு பிளாட் பைஜூஸ்-ன் மற்றொரு மூத்த அதிகாரியான ரிஜு ரவீந்திரனின் மனைவி தீப்தா அகிலா ராகவன் பெயரில் இருந்த 15,180 சதுரடி நிலத்தை 35.70 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார் விதித் ஆத்ரே.

இந்த இரு பிளாட்டும் ஓட்டி அமைந்திருப்பவை என்பதால் மொத்தம் 33,500 சதுரடி நிலத்தை சுமார் 83.81 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

பைஜுஸ் நிறுவனம் பல முதலீட்டாளர்களுக்கு, அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தாத காரணத்திற்காக 2024ல் இருந்து திவால் நடவடிக்கையை எதிர்கொண்டு வரும் வேளையில் ரவீந்திரன் குடும்பம் அடுத்தடுத்து 2 நிலத்தை விற்பனை செய்து சுமார் 83.81 கோடி ரூபாய் அளவிலான நிலத்தை கைப்பற்றியுள்ளது.

பெங்களூரில் கடந்த சில வருடங்களாகவே ஆடம்பர வீடுகள், அப்பார்ட்மென்ட் தான் அதிகம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது, இதனால் மிடில் கிளாஸ் மக்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்றாலே குறைந்தது 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான தொகையை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இதற்கு ஏற்றார் போல் தற்போது விதித் ஆத்ரேவும் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+