இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் துறையில் பல புதிய மாற்றங்களும் வேகமாக உருவாகி வருகிறது.
இதனால் நிறுவனங்கள் வர்த்தகப் போட்டியை தாண்டி புதிய வர்த்தக முறைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. அந்த வகையில் சீனாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் ஈகாமர்ஸ் வர்த்தகத்தைக் காப்பியடித்து இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது மீஷோ நிறுவனம்.
இதனால் ஆன்லைன் பேஷன் மற்றும் ஆடைகளை அதிகம் விற்பனை செய்யும் பிளிப்கார்ட் மற்றும் மின்திரா நிறுவனத்திற்கு மீஷோ பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
மீஷோ நிறுவனம்
சோசியல் காமர்ஸ் பிளாட்பார்ம் ஆக விளங்கும் மீஷோ நிறுவனம் பிற ஈகாமர்ஸ் நிறுவனங்களை விடவும் சற்று மாறுபட்டது. பொதுவாக ஈகாமர்ஸ் தளத்தில் விற்பனையாளர்கள் பொருட்களை விற்பனை செய்வார்கள்.
தயாரிப்பவர்களும், டிஸ்ட்ரிபியூட்டர்களும்
ஆனால் மீஷோ தளத்தில் பொருட்களைத் தயாரிப்பவர்களும், டிஸ்ட்ரிபியூட்டர்களும், இறக்குமதியாளர்களும் இருப்பார்கள் இதனால் மீஷோ தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை மற்ற தளத்தை விடவும் குறைவாகவே இருக்கும், மேலும் மீஷோ தளத்தின் மூலம் சிறு குறு விற்பனையாளர்கள் அதிகளவில் நன்மை அடைகிறார்கள்.
லைவ் காமர்ஸ்
இந்நிலையில் மீஷோ தனது ஈகாமர்ஸ் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் ஈகாமர்ஸ் அல்லது லைவ் காமர்ஸ் சேவையைப் புதிதாகக் கொண்டு வர திட்டமிட்டு அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. சரி லைவ் காமர்ஸ் என்றால் என்ன..? லைவ் காமர்ஸ் சீனாவில் எப்படி இயங்குகிறது..?
இந்தியாவில் இப்புதிய சேவையின் தாக்கம் எப்பிடி இருக்கும் என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
சீனாவின் Taobao
லைப் காமர்ஸ் சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் சேவை தளமாக Taobao தனது ஈகாமர்ஸ் வாடிக்கையாளர்களிடம் லைவ் ஸ்ட்ரீமிங் வாயிலாகப் பொருட்கள் குறித்து விபரத்தையும் அதன் பயன்பாட்டையும் விளக்கி அதே நேரத்தில் அதிகப்படியான தள்ளுபடியில் அப்பொருட்களை வாங்கவும் வாய்ப்பு அளிக்கிறது.
அதிக வர்த்தகம்
இத்தகையை விற்பனை முறை மூலம் Taobao தளத்தில் இருக்கும் நிறுவனங்கள் குறைந்த காலகட்டத்தில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று பெரிய அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
பெரிய வெற்றி
இந்த லைவ் காமர்ஸ் முறை சீனாவில் பெரிய அளவிலான வெற்றி அடைந்துள்ள நிலையில் தற்போது ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு social media influencer-களும் சில நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
சீனா லைவ் காமர்ஸ் ஆதிக்கம்
2020 அலிபாபா சிங்கிள் டே விற்பனை துவங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட Taobao லைவ் விற்பனையில் சுமார் 7.5 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் லைவ் காமர்ஸ் வர்த்தகம் 2017ல் வெறும் 3 பில்லியன் டாலராக இருந்து 2018ல் 22 பில்லியன் டாலர், 2019ல் 67 பில்லியன் டாலர், 2020ல் 171 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான தரவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் 2022ல் இதன் வர்த்தகம் 423 பில்லியன் டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
மீஷோ திட்டம்
இந்த வெற்றிபெற்ற வர்த்தக மாடலை தான் மீஷோ இந்தியாவிற்கு அறிமுகம் செய்யத் திட்டமிட்டு, கூடிய விரைவில் மீஷோ தளத்தில் விற்பனையாளர்கள் லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் பொருட்களை விற்பனை செய்வார்கள் என மீஷோ தெரிவித்துள்ளது.
இதற்காக இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பல social media influencer-களை மீஷோ தனது தளத்தில் சேர்த்து வருகிறது.
பிளிப்கார்ட், மின்திரா
பொதுவாக லைவ் காமர்ஸ் வாயிலாகப் பேஷன் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் நிலையிலும் மீஷோ அதற்கான திட்டத்தை ஏற்கனவே துவங்கியுள்ள நிலையிலும் பேஷன் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் பிளிப்கார்ட், மின்திரா லைவ் காமர்ஸ் வர்த்தகத்தில் இன்னும் இறங்காமல் உள்ளது, ஆனால் லைவ் காமர்ஸ் வர்த்தகத்திற்காக மோஜ் தளத்துடன் (MOJ) கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைவலி
இதேபோல் ஷாட் வீடியோ தளமான ரோபோசோ தளமும் லைவ் காமர்ஸ் வர்த்தகத்தில் இறங்கவும் முயற்சி செய்து வருகிறது.
மீஷோ நிறுவனம் ஏற்கனவே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இப்புதிய லைவ் காமர்ஸ் தளம் பிளிப்கார்ட் மைந்திரா நிறுவனத்திற்குப் பெரும் தலைவலியாக மாற்ற உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications