இந்தியாவின் மிகவும் பிரபலமான ஈ-காமர்ஸ் நிறுவனமான மீஷோ, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் மேம்படுத்தும் திட்டத்துடன் இருக்கிறது. இக்காலகட்டத்தில் பதிவாகும் அதிகப்படியான வர்த்தகத்தைச் சமாளிக்க மீஷோ நிர்வாகம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
பண்டிகை கால வர்த்தகத்தைப் பூர்த்தி செய்ய அதன் விற்பனையாளர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க்கில் கிட்டத்தட்ட 5 லட்சம் ஊழியர்களைச் சேர்க்க உள்ளது. இது சீசனல் வேலை வாய்ப்புகள் என்பதால் இந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை முழுநேர வேலைவாய்ப்பாக மாறுவது கடினம்.

ஆனால் பகுதி நேர வேலை பிரிவில் பணி தேடும் அனைவருக்கும் இது மாபெரும் ஜாக்பாட் ஆக அமையும். கடந்த ஆண்டு மீஷோ உருவாக்கிய இத்தகைய சீசனல் வேலை வாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 50 சதவீதம் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய வருட பண்டிகை கால விற்பனையை ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் மத்திய அரசும் பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அனைத்துத் தரப்பு வர்த்தகப் பரிவுகளும் இந்தப் பண்டிகை கால விற்பனைக்குத் தயாராகி வரும் வேளையில் டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் ஊழியர்களை அதிகளவில் சேர்க்கத் திட்டமிட்டு வருகிறது.
இதில் மீஷோ திட்டமிட்டு உள்ள 5 லட்சம் வேலைவாய்ப்புகளில் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் தன்னுடைய டெலிவரி பார்ட்னர்கள் வாயிலாக அதாவது Ecom Express, DTDC, Elastic Run, Loadshare, Delhivery, Shadowfax போன்ற நிறுவனத்தின் வாயிலாக உருவாக்க உள்ளது. இந்த 2 லட்ச வேலைவாய்ப்புகளில் 60 சதவீதம் 3ஆம் , 4ஆம் தர நகரங்களில் இருக்கும் படி மீஷோ திட்டமிட்டு உள்ளது.
மீதமுள்ள 3 லட்சம் வேலைவாய்ப்புகளை மீஷோ தளத்தில் இருக்கும் விற்பனையாளர்கள் இந்தப் பண்டிகை காலக் கூடுதல் பணிகளுக்காகச் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மீஷோ தளத்தில் இருக்கும் விற்பனையாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் புதிய பொருட்களை இந்தப் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளனர் என மீஷோ தெரிவித்துள்ளது.
மேலும் பல விற்பனையாளர்கள் பேஷன் பொருட்கள் மற்றும் ஹோம் டெக்கார் பிரிவில் இந்தப் பண்டிகை கால விற்பனைக்காக இறங்க உள்ளனர். மேலும் மீஷோ விற்பனையாளர்கள் கூடுதல் கிடங்கு, குடோன் சேவைகளுக்காக அதிகப்படியான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாக மீஷோ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த 500000 ஊழியர்களுக்கான வேலைவாய்ப்புகளை மீஷோ நேரடியாக உருவாக்கவில்லை, மீஷோ சார்ந்து இருக்கும் விற்பனையாளர்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் உருவாக்குகிறது. இதனால் இவை அனைத்தையும் மீஷோ கணக்கில் சேர்க்க முடியாது இதே விற்பனையாளர்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் பிற ஈகாமர்ஸ் தளத்திற்கும் பணியாற்றும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உண்மையில் இந்தப் பண்டிகை காலத்தில் டெலிவரி முதல் கிடங்குகள் வரையில் அனைத்து பிரிவுகளிலும் தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதனால் கிக் ஊழியர்கள், ப்ரீலான்சர் ஊழியர்கள் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் இப்பிரிவு மக்களுக்கு இந்தப் பண்டிகை கால வர்த்தகம் ஜாக்பாட் ஆக மாற உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications