இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான மீஷோ, மும்பை பங்குச்சந்தையில் பட்டியிலிட முடிவு செய்துள்ளது. இதற்காக ஐபிஓ வெளியிட விண்ணப்பித்தை ரகசியமான முறையில் சமர்ப்பிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த ஐபிஓ மூலம் 700-800 மில்லியன் டாலர் வரையிலான நிதியை திரட்ட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஐபிஓ செயல்பாடுகளுக்காக சாப்ட்பேங்க் உள்ளிட்ட முதலீட்டாளர்களின் ஆதரவுடன் இயங்கி வரும் மீஷோ, சிட்டி குரூப், கோடக் மஹிந்திரா, மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவற்றை ஆலோசகர்களாக சேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரகசிய ஐபிஓ என்றால் என்ன..?

பெங்களூருவை தளமாகக் கொண்ட மீஷோ இந்த ஐபிஓ மூலம் திரட்டும் $700 முதல் $800 மில்லியன் நிதியை மீஷோ நிர்வாகம் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்கும், சந்தை ஆதிக்கத்தையும் வலுப்படுத்தவும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஓ வெளியிடுவது குறித்து இறுதி முடிவு இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், இந்த முயற்சி மீஷோவின் வளர்ச்சி பாதையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மீஷோ இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் தனித்துவமான ஒரு நிறுவனம். சிறு வணிகர்கள் மற்றும் தனிநபர் விற்பனையாளர்களை மையமாகக் கொண்டது மீஷோவின் வர்த்தக முறை.
ஐபிஓ செயல்முறைக்கு, மீஷோ சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிட்டி குரூப் இன்க்., கோடக் மஹிந்திரா கேபிடல் கோ., மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவற்றை ஆலோசகர்களாக நியமித்துள்ளது. இந்த நிறுவனங்களின் நிபுணத்துவம், மீஷோவின் ஐபிஓவை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஓ திட்டம் குறித்து மீஷோவ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், நிறுவனத்தின் அதிரடி வளர்ச்சி இந்த ஐபிஓவை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக மாற்றியுள்ளது. மீஷோவின் சந்தை மதிப்பு இந்த ஐபிஓ வாயிலான நிதி திரட்டல் மூலம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரகசிய ஐபிஓ (Confidential IPO): ரகசியமாக தாக்கல் செய்யப்படும் ஐபிஓ என்பது, ஒரு நிறுவனம் தனது IPO ஆவணங்களை, உடனடியாக பொதுமக்களுக்கு வெளியிடாமல், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யிடம் சமர்ப்பிக்கும் ஒரு செயல்முறையாகும்.
சாதாரண ஐபிஓ தாக்கல் முறைக்கும், ரகசிய ஐபிஓ தாக்கல் முறைக்கும் உள்ள வேறுபாடு என்ன:
சாதாரண ஐபிஓ: ஒரு நிறுவனம் ஐபிஓவுக்குச் செல்லும்போது, அதன் DRHP எனப்படும் விரிவான ஆவணத்தை SEBI-யிடம் சமர்ப்பித்தவுடன், அந்த ஆவணங்கள் பொதுமக்களுக்கும் உடனடியாகக் கிடைக்கும். இதில் நிறுவனத்தின் நிதிநிலை, வணிகத் திட்டங்கள், அபாயங்கள் போன்ற அனைத்து விவரங்களும் வெளிப்படையாக இருக்கும்.
ரகசிய ஐபிஓ: இந்த முறையில், நிறுவனம் தனது DRHP-யை SEBI-யிடம் சமர்ப்பித்தாலும், அது உடனடியாக பொதுவெளியில் வெளியிடப்படாது. SEBI-யின் கருத்துகள் மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு, நிறுவனம் ஐபிஓவை வெளியிடுவதற்கான இறுதி முடிவை எடுக்கும்போது மட்டுமே, திருத்தப்பட்ட DRHP பொதுமக்களுக்குக் கிடைக்கும். இதன் மூலம் பல விஷயங்கள் பொது சந்தையில் வெளி வருவதை காத்துக்கொள்ள முடியும்.
சந்தையின் தற்போதைய நிலை, முதலீட்டாளர்களின் மனநிலை மற்றும் ஐபிஓவுக்கு உகந்த காலம் ஆகியவற்றை இரகசியமாக ஆய்வு செய்ய இந்த முறை உதவுகிறது. பொதுவில் அறிவித்த பிறகு, சந்தை சாதகமாக இல்லாவிட்டால் ஐபிஓவை ஒத்திவைப்பது அல்லது ரத்து செய்வது நிறுவனத்திற்கு ஒரு பின்னடைவாகத் தோன்றலாம். ஆனால் ரகசியமாக இருந்தால், அத்தகைய சங்கடங்களை தவிர்க்கலாம்.
இந்தியாவில், செபி (SEBI) 2022-ஆம் ஆண்டில் கொண்டு வந்த ICDR திருத்தங்களில் இந்த ரகசிய ஐபிஓ தாக்கல் முறையை அனுமதித்தது. இது பல நிறுவனங்களுக்கு, குறிப்பாக வேகமாக வளரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications