இந்தியாவின் முன்னணி ஈ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான மீஷோ முதல் முறையாக ஜூலை மாதம் வரிக்கு பின்பு லாபத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. மீஷோ நிறுவனம் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டு வரும் வேளையில் இப்போது முதல் முறையாக வாபத்தை பதிவு செய்துள்ளது என MEESHO மூத்த நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் சந்தையில் அமேசான் மற்றும் வால்மார்ட்-இன் Flipkart உடன் போட்டியிடும் Meesho, ஆடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்ற முக்கிய பிரிவுகளில் பிராண்ட் அல்லாத தயாரிப்புகளுடன் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள், 2ஆம் தர நகரங்களை குறிவைத்து வர்த்தகம் செய்கிறது.

மீஷோ 2015 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே பதிவு செய்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக லாபத்தை பதிவு செய்துள்ளது. ஜப்பான் நாட்டின் SoftBank நிறுவனத்தின் முதலீட்டில் மீஷோ இயங்கி வருகிறது.
ஜனவரி மற்றும் ஜூன் மாதங்கள் மத்தியிலான காலக்கட்டத்தில் மீஷோ சுமார் 400 மில்லியன் டாலர் வருவாயை பெற்றுள்ளது, இந்த ஆண்டு இறுதியில் இதன் அளவு 800 மில்லியன் டாலரை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தலைமை நிதி அதிகாரி திரேஷ் பன்சால் தெரிவித்தார்.

கடந்த 12 மாதத்தில் மீஷோ நிறுவனத்தின் வளர்ச்சி பிராம்மாண்டமாக இருந்த நிலையில், மொத்த ஆர்டர் மதிப்பு 43 சதவீதம் அதிகரித்து 100 கோடிக்கும் அதிகமான ஆர்டர்கள் குவிந்துள்ளது. மீஷோ தளத்தில் வருபவர்கள் சுமார் 85 சதவீதம் returning users தான், அதாவது ஏற்கனவே ஆர்டர் செய்தவர்கள். பேஷன் அல்லாத பிரிவில் 120 சதவீத வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது மீஷோ.
2022 ஆம் நிதியாண்டில் மீஷோ சுமார் 3,247.8 கோடி ரூபாய் மொத்த இழப்பை எதிர்கொண்டது, இது முந்தைய ஆண்டை காட்டிலும் 550% அதிகமாகும். வருவாய் அளவு 2022 ஆம் நிதியாண்டில் 3,359.4 கோடி ரூபாயாக இருந்தது, 2021 ஆம் நிதியாண்டின் 838.6 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் 300 சதவீதம் அதிகமாகும்.
மீஷோ நிறுவனத்தை ஐஐடி கல்லூரி பட்டதாரிகளான விதித் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பர்ன்வால் ஆகியோர் இணைந்து நிறுவினர். மீஷோ பிற ஈகாமர்ஸ் போன்ற ஒரு நிறுவனமாக தெரிந்தாலும், இதன் வர்த்தக மாடலின் முதுகெலும்பு ரீசெல்லர் கான்செப்ட், அதேபோல் டார்கெட் மார்கெட் கிராமம், சிறு நகரங்கள், 2ஆம் தர நகரங்கள் என்பதால் சிறு முன்னேற்றமும் பெரிய அளவிலான தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்தும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications