இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. இந்திய மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதத்தினர் ஆதார் கார்டை வைத்துள்ளனர். வங்கிகளில் கணக்கு திறப்பது முதல் அரசாங்க சலுகைகளைப் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஓட்டு மொத்த மக்களின் டேட்டாக்களையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேக ஆதார் நம்பர் வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்துதான் பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் UIDAI மக்களுக்குப் பயன்பெறும் வகையில் ஆதார் கார்டு சாட்போட்டான மித்ராவை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் கார்டு பயனர்களுக்கு மற்றொரு புதிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. அதுதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆதார் சாட்போட் மித்ரா. இந்த ஆதார் மித்ரா மக்களின் பல்வேறு பணிகளை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மக்கள் சில சேவைகளை பெற அலைந்து திரிய வேண்டியதில்லை. அனைத்து வேலைகளும் ஆதார் மித்ராவால் எளிதில் செய்யப்படும்.

ஆதார் மித்ராவை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் தங்கள் ஆதார் கார்டின் நிலையை கண்காணிக்கலாம். உங்கள் ஆதாரின் நிலையை, உங்கள் EID, SRN அல்லது URN ஆகியவற்றை சாட்போட்டில் பதிவிட்டு சரிபார்க்கலாம். அதோடு டிஜிட்டல் ஆதார் கார்டை டவுன்லோட் செய்யலாம். செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஆதார் கார்டை எடுத்துச் செல்வதற்கு பதிலாக இதுபோன்ற டிஜிட்டல் வடிவில் ஆதார் கார்டை வைத்திருப்பது பெருமளவில் சிக்கல்களை தவிர்க்கும்.
தேவைப்பட்டால் அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்களையும் கண்டறியலாம். ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அதைப் பற்றி புகார் அளிக்கலாம், ஆனால் இந்த ஆதார் மித்ராவை பயன்படுத்தி எந்த ஒரு தகவல்களையும் நீங்கள் அப்டேட் செய்ய முடியாது.
ஆனால் பயனர்கள் தங்களுடைய முகவரி விவரங்கள், மொபைல் நம்பர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை myAadhaar போர்ட்டலில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க UIDAI பரிந்துரைக்கிறது. சிலர் தங்களுடைய வீட்டு முகவரியை மாற்றி இருப்பார்கள், சிலர் நம்பர் மாற்றி இருப்பார்கள் இதுபோன்ற நபர்களும் தங்களுடைய விவரங்களை துல்லியமாக ஆதார் கார்டில் வைத்திருப்பது அவசியம். 2025-ஆம் ஆண்டின் ஜூன் 14-ஆம் தேதி வரையில் ஆதார் கார்டு விரவாரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ள அரசு காலக்கெடு வழங்கியுள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications