லண்டன்: இந்தியாவில் தற்போது ஐபிஎல் போட்டிகள் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக உருவாகியுள்ளன. கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு நிகழ்வாகவும் ஐபிஎல் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைய காரணமானவர் லலித் மோடி. முன்னாள் ஐபிஎல் சேர்மன் லலித் மோடி இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபரும் கூட.
லலித் மோடியின் மகள் ஆலியா மோடி தற்போது லண்டனில் தொழிலதிபராக வலம் வருகிறார். 1993 ஆம் ஆண்டு லலித் மோடி மற்றும் மினால் மோடி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஆலியா. இவருக்கு ருச்சிர் மோடி என ஒரு இளைய சகோதரனும் உண்டு.

ஆலியா பாஸ்டனில் உள்ள பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் வரலாற்று பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தார். இதனை அடுத்து லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இன்டீரியர் டிசைன் குறித்த படிப்பினை முடித்தார்.
தற்போது இன்டீரியர் டிசைனிங் துறையில் இவர் மிகப்பெரிய நபராக உருவாகி இருக்கிறார். ஏஎம்ஆர்எம் இன்டர்நேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு அவர் லண்டன் மற்றும் ஹாங்காங்கில் உள்ள புகழ்பெற்ற கட்டடக் கலை நிறுவனங்கள் மற்றும் கட்டட வடிவமைப்பு துறை நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது ஆலியா மோடிக்கு சொந்தமான ஏஎம்ஆர்எம் கன்சல்டிங் நிறுவனம் 8.3 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நிறுவனமாக இருக்கிறது. தந்தையைப் போலவே இவரும் மிகச் சிறந்த தொழிலதிபராக உருவாகி வருகிறார்.
2022 ஆம் ஆண்டு ஆலியா மோடி, ப்ரெட் பால்சன் என்பவரை இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். மிகப் பிரம்மாண்டமான முறையில் இவரது திருமண நிகழ்வுகள் நடைபெற்றன.
இவரது சகோதரன் ருச்சிர் மோடி இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் முனைவோராக வளர்ந்து வருகிறார். இவர், காட்ஃபிரே பிலிப்ஸ் இந்தியா லிமிடெட் (Godfrey Phillips India Ltd), மோடி எண்டர்பிரைசஸ் (Modi Enterprises), கேகே மோடி குரூப்(KK Modi Group) மற்றும் மோடி கேர் (Modicare) ஆகிய நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். இவர் மோடி வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.
லலித் மோடியை பொறுத்தவரை அவரது சொத்து மதிப்பு 4,555 கோடி ஆகும். அவரது தொழில் குழுமமான மோடி எண்டர்பிரைசஸின் மதிப்பு மட்டுமே 23,450 கோடி ரூபாயாகும். லலித் மோடியை சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் இருந்தாலும் அவருடைய சொத்து அவருடைய தொழிலும் அதனால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications