புகழ்பெற்ற பாலிவுட் நடிகர்கள் என்றாலே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள், பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் படங்களின் மூலம் சம்பாதிப்பது மட்டுமின்றி திரைப்படங்களை தயாரிப்பது தங்களுடைய பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கி தொழில் புரிவது உள்ளிட்டவற்றையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பாலிவுட் பிரபலம் என்றாலே அவர்களுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருமானம் இருக்கும். இப்படி பெரும்பாலான பாலிவுட் பிரபலங்களின் கணக்கையும் பார்த்துக் கொள்ளக் கூடிய ஒரு கணக்குப்பிள்ளைதான் பட்டய கணக்காளரான பீமல் பரேக். இவர் ரன்பீர் கபூர், அமீர்கான், கத்ரீனா கைஃப் போன்ற முன்னணி பாலிவுட் பிரபலங்களின் நிதி ஆலோசகராகவும், பட்டயக் கணக்காளராகவும் இருக்கிறார்.

பெரிய பாலிவுட் பிரபலங்களின் நிதி தொடர்பான தகவல்களையும் பராமரிப்பவர் இந்த ஒரு நபர் தான். இவர் பெயர் பீமல் பரேக், இது தவிர பல்வேறு பாலிவுட் பிரபலங்களுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இவர்தான் கணக்குப்பிள்ளை. பரேக்கை பொருத்தவரை அவருடைய தந்தை ஒரு பட்டைய கணக்காளர். எனவே சிறுவயதிலிருந்தே தந்தையை பார்த்திருந்த தனக்கு இந்த கணக்கு விஷயங்களில் மிகவும் ஆர்வம் அதிகம் எனவே அந்த துறை சார்ந்து என்னுடைய படிப்பை முடித்தேன் என தெரிவித்திருக்கிறார்.
தான் முதன் முதலில் வேலைக்கு சென்ற நிறுவனம் பாலிவுட் பிரபலங்களுக்கு கணக்கு பார்த்து வழங்கக்கூடிய பட்டைய கணக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் என்பதால் பல்வேறு நடிகர்களோடு எனக்கு தொடர்பு உண்டானது என கூறுகிறார். நான்கு வருடங்கள் இந்த துறையில் அனுபவம் பெற்ற பிறகு நான் தனியாக ஒரு கன்சல்டிங் நிறுவனத்தை தொடங்கினேன் அப்பொழுதுதான் ஆமீர்கான் எனக்கு அறிமுகமானார் அவருடைய வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வது அவருடைய நிதியை பராமரிப்பது என நான் வேலை செய்ய தொடங்கினேன் என கூறியுள்ளார்.
அடுத்ததாக ஆமீர்கான் ஜூஹி சாவ்லாவை அழைத்து வந்தார் அவருடைய கணக்கையும் நான் பார்த்து வழங்கினேன். இப்படி பரிந்துரையின் பெயரில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் என்னிடம் வரத் தொடங்கினர் நான் அவர்களுக்கு தற்போது நிதி ஆலோசகராக இருந்து வருகிறேன் என பெருமையுடன் தெரிவிக்கிறார். இது தவிர பல்வேறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் கணக்காளராகவும் நான் தான் செயல்பட்டு வருகிறேன் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு சமயத்தில் ஷாருக்கானின் நிறுவனத்தில் ஆடிட்டராக இவருக்கு பணி வழங்கப்பட்டது. ரன்பீர் சிங், கத்ரீனா கைஃப் உள்ளிட்டோருக்கும் இவர் தான் தற்போது பட்டய கணக்காளர். ரன்பீர் சிங்குடன் இணைந்து மும்பையின் கால்பந்தாட்ட அணியின் துணை உரிமையாளரும் இவர் செயல்படுகிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications