முப்படைகளிலும் பணியாற்றிய மாவீரன்… இவர் பங்கேற்காத போரே இல்லை தெரியுமா?

நம் இந்திய வரலாற்றில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பிரத்தியேக இடம் கிடைக்கும். அப்படி நம் இந்திய ராணுவத்தில் மூன்று படைகளிலும் பணியாற்றிய ஒரு மாவீரன் குறித்து தான் இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

கர்னல் பிரிதிபால் சிங் கில், இந்தியாவின் விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவம் என மூன்றிலுமே இவர் பணியாற்றி இருக்கிறார். கடந்த 1920 ஆம் ஆண்டு பாட்டியாலா நகரில் பிறந்தவர் தான் சிங் கில். இவருடைய குடும்பமே ராணுவ பாரம்பரியம் கொண்டது. இவர் 1942 ஆம் ஆண்டு ராயல் இந்திய விமானப்படையில் பணிக்கு சேர்த்தார். அப்போது இவருக்கு வயது 22 தான். விமானப்படையில் சேர்வது குறித்து தன் குடும்பத்தினரிடம் கூட இவர் தெரிவிக்கவில்லை.

முப்படைகளிலும் பணியாற்றிய மாவீரன்… இவர் பங்கேற்காத போரே இல்லை தெரியுமா?

அந்த சமயத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்போது இவர் கராச்சி நகரில் போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை பெற்று வந்தார். இவருடைய தந்தையான மேஜர் ஹெர்பல் சிங் விமானப்படையிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து பிரிதிபால் சிங் விமானப்படையில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படையில் அடுத்த ஆண்டிலேயே பணிக்கு சேர்ந்தார்.

1943 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் தீர் கப்பலில் இவருக்கு வேலை வழங்கப்பட்டது. இவர் கடற்படையின் ஒரு பகுதியாக இரண்டாம் உலகப் போரிலும் பங்கேற்றார். போர் நடந்து கொண்டிருந்த வேளையில் சர்வதேச கடல் பகுதிகளில் சரக்கு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணி இவருக்கு வழங்கப்பட்டது. அதனை திறம்பட செய்து காட்டினார்.

இதனை அடுத்து நாடு சுதந்திரம் அடைந்ததை அடுத்து அவர் கடற்படையில் இருந்து விலகி ராணுவத்தில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்த அவர் 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் 71 வது மீடியம் ரெஜிமென்ட்டில் களத்தில் நின்று போரிட்டார். பின்னர் அஸ்ஸாம் ரைஃபிள் பிரிவில் செக்டார் கமாண்டராக பொறுப்பேற்றார் .

1970 ஆம் ஆண்டு கர்னலாக ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவம் என மூன்று படைகளிலும் பணியாற்றிய பெருமை கொண்டவர் தான் இவர். இரண்டாம் உலகப்போர், இந்தியா பாகிஸ்தான் போர் என இந்திய வரலாற்றில் முக்கிய அங்கம் வகிக்கக்கூடிய அனைத்து போர்களிலும் இவருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய 100ஆவது பிறந்த நாளை இவர் கொண்டாடினார். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இவர் காலமானார். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இருந்த ராணுவத்திலும் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இருந்த ராணுவத்திலும் பணியாற்றிய அனுபவத்துடன் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

FAQs
எந்தெந்த போர்களில் எல்லாம் இவர் பங்கேற்றுள்ளார்?

இரண்டாம் உலகப் போர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் போர்களில் பங்கேற்றவர்.

இந்திய கடற்படையில் எந்த போர் கப்பலில் இவர் வேலை செய்தார்?

1943 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் தீர் கப்பலில் இவருக்கு வேலை வழங்கப்பட்டது.

யார் இந்த பிரிதிபால் சிங் கில்?

இவர் ஒரு கர்னல். இந்திய ராணுவத்தின் முப்படைகளான ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றிலும் பணிபுரிந்தவர்.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+