மாமா எர்த் நிறுவனத்தின் நிறுவனரான கஜல் அலக், "ஐடிஎஃப்சி பிரைவேட் & ஹுரூன் இந்தியா டாப் 200 என்டர்பிரணர்" லிஸ்டில் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளர். ஹோனசா நிறுவனத்தின் இணை நிறுவனமான மாமா எர்த் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது, தற்போது இதன் சந்தை மதிப்பு 15,500 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் 50 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக இந்த புகழ்பெற்ற நபர்களின் பட்டியலில் கஜல் அலாக்கும் இடம் பெற்றுள்ளார்.
பட்டியலில் கஜல் அலாக் மட்டுமின்றி, இந்திய வணிக உலகில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்ற பிற நபர்களும் இணைந்துள்ளனர். நைக்கா நிறுவனத்தின் நிறுவனரான பால்குனி நாயர் மற்றும் லென்ஸ் கார்ட் நிறுவனத்தின் நேஹா பன்சால் போன்ற பிற தொழில் முனைவோர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த இருவரும் முக்கியமான நபர்களாக இருந்தாலும், கஜல் அலாக்-கின் வேகமான வளர்ச்சி மற்றும் இளம் வயது அவரை தனித்துவமாக காட்டுகிறது. ஏனெனில் கஜல் அலாக்கின் தற்போதைய வயது 36. நைக்கா நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ. 56,600 கோடியாக உள்ளது. அதேபோல லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 41,800 கோடியாக இருக்கிறது.

ரூ.41,600 கோடி மதிப்புள்ள ஆப் பிசினஸ்-இன் இணை நிறுவனரான ருச்சி கல்ரா, ரூ.28,200 கோடி ரூபாய் மதிப்புள்ள அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான கவிதா சுப்ரமணியன் ஆகியோரும் பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகரித்து வருவதையும் ஹுருன் அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.
நைக்கா நிறுவனத்தின் நிறுவனரான பால்குனி நாயர் 10-வது இடத்தை பிடித்து பட்டியலிலேயே மிக உயர்ந்த அந்தஸ்தை பெற்றுள்ளார். இவரின் ஆன்லைன் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் தளமான நைக்கா அபார வளர்ச்சி அடைந்துள்ளது. 1000-த்திற்கும் மேற்பட்ட பிராண்டுகள் இதில் வழங்கப்படுகிறது. ஈ-காமர்ஸ் துறையில் மிக முக்கியமான நிறுவனமாக நைக்கா இருந்து வருகிறது.
இதோடு குவிக் காமர்ஸ் தளங்களும் இந்தியாவில் வளர்ந்து வருவதை அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. செப்டோ நிறுவனத்தின் இணை நிறுவனரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். செப்டோ நிறுவனத்தின் மதிப்பு தற்போது 41,800 கோடியாக உள்ளது, இந்த நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான ஆதித் பாலிச்சாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். பட்டியலில் இடம் பெற்றுள்ள தொழில் முனைவோர்கள் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளனர். சில்லறை விற்பனை, சுகாதாரம், ஆன்லைன் சேவைகள் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள தொழில் முனைவோர்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளனர் .
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications