சென்னை: தற்போது கிரிக்கெட் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளை காணும் பலருக்கும் ட்ரீம் 11 செயலி குறித்து தெரியாமல் இருக்காது. இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்க கூடிய ஒரு ஃபேண்டஸி கேமிங் செயலி இது. இந்த செயலியின் வளர்ச்சிக்கு காரணமானவர் இதன் தலைமை செயல் அதிகாரியான ஹர்ஷ் ஜெயின்.
ஹர்ஷ் ஜெயினுக்கு சிறுவயது முதலே கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகம். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் தீவிர ரசிகர் ஆவார். இவருக்கு கிரிக்கெட்டையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் கல்லூரி காலம் முதலே இருந்து வந்தது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மின்சார பொறியியல் ,கணிதம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றையும், கொலம்பியா பிசினஸ் பள்ளியில் எம் பி ஏ-வும் பயின்று முடித்தார். கல்லூரி பயிலும் போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பெற்ற இவர் அங்கு சென்று கிடைத்த அனுபவங்களின் மூலம் ஒரு பேண்டஸி ஸ்போர்ட்ஸ் செயலியை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
அமெரிக்காவில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர் 2008 ஆம் ஆண்டு ஹர்ஷ் ஜெயினும் அவரது நண்பரான பவித் சேத்தும் இணைந்து ட்ரீம் 11 என்ற செயலியை உருவாக்கினர். மக்கள் விளையாட்டுகளை தங்களுக்கு பிடித்த கற்பனையான முறையில் அனுபவிக்க வேண்டும் என்று நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் ட்ரீம் 11. தொடக்கத்தில் பல்வேறு நிராகரிப்புகளை இந்த செயலி சந்தித்தது. ஆனால் தற்போது இந்தியாவின் மிகப் பிரபலமான பேண்டஸி ஸ்போர்ட்ஸ் தளமாக ட்ரீம் 11 செயலி வெற்றியடைந்துள்ளது.
விளையாட்டு துறையில் ட்ரீம் 11 தளம் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது கிட்டத்தட்ட 150 வென்ச்சர் கேப்பிட்டலிஸ்ட் நிறுவனங்கள் இந்த பிசினஸ் ஐடியாவை நிராகரித்தன என ஹரிஷ் ஜெயின் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ட்ரீம் 11 செயலியானது சூதாட்டத்தை ஊக்குவிப்பதாகவும் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து வந்து தற்போது இந்தியாவில் உரிய அங்கீகாரத்தோடு செயல்படக்கூடிய ஒரு பிளாட்பார்ம் ஆக மாறியுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம் கிரிக்கெட் , கால்பந்து, கூடைப்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளை நமக்கு பிடித்த வீரர்களை தேர்வு செய்து, அவர்கள் எடுக்கும் ரன்கள் , கோல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகளை பெறுவதுதான் இதன் அடிப்படை.
இந்தியாவில் ட்ரீம் 11 செயலியானது 2016ஆம் ஆண்டில் 2 மில்லியன் பயனாளர்களை மட்டுமே கொண்டிருந்தது. 2020 ஆம் ஆண்டில் 100 மில்லியன் பயனாளர்கள், 2021 ஆம் ஆண்டில் 140 மில்லியன் பயனாளர்கள், 2024 ஆம் ஆண்டில் 200 மில்லியன் பயனாளர்கள் என உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ட்ரீம் 11 நிறுவனம் யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனமாக மாறியது. இந்தியாவில் தற்போது மூன்று விளையாட்டு செயலி நிறுவனங்கள்தான் யூனிகார்ன் நிறுவனங்களாக உள்ளன கேம் 24/7, மொபைல் பிரிமியர் லீக் அதற்கு அடுத்து ட்ரீம் 11 அந்த இடத்தை பிடித்திருக்கிறது. தற்போது ட்ரீம் 11 நிறுவனத்தின் மதிப்பு 65,000 கோடி ஆகும்.
ஒரு ஐடியா எத்தனை நிராகரிப்புகளை சந்தித்தாலும், அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ட்ரீம் 11 மற்றும் அதன் நிறுவனர் ஷர்ஸ் ஜெயின் மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications