பெரிய நிறுவனங்களை நிறுவி, அதன் வளர்ச்சியில் மட்டும் பங்களிக்காமல் சமூக நலனுக்காகவும் பலர் நன்கொடை வழங்கியுள்ளனர். அப்படி இந்த ஆண்டு மட்டும் பல லட்சம் கோடியை நன்கொடையாக ஒரு ஜோடி வழங்கியுள்ளனர். மைண்ட்ரி நிறுவனத்தின் தலைவர் சுஷ்மிதா மற்றும் சுப்ரோடோ பாக்ச்சி தம்பதியர் ரூ. 179 கோடி நன்கொடை அளித்து, 2024-ஆம் ஆண்டின் ஹுரூன் இந்தியா நன்கொடையாளர் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுஷ்மிதா மற்றும் சுப்ரோடா பாக்சி இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான நன்கொடையை வழங்கி வருகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்வதற்கு அப்பால் அவர்களுடைய பெருந்தன்மைக்காக அறியப்பட்டவர்கள். 2022-ஆம் ஆண்டில் ரூ.213 கோடியும், 2023-ஆம் ஆண்டில் ரூ.110 கோடியும் சுகாதார சேவைகளுக்காக இந்த தம்பதியினர் வழங்கியுள்ளனர். அவர்களின் தொண்டு முயற்சிகள் சமீபத்தில் வெளியான ஹுரூன் இந்தியா நன்கொடையாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு ஹுரூன் இந்தியா நிறுவனம், இந்தியாவில் உள்ள மிகவும் தாராளமான நபர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி போன்ற நன்கு அறியப்பட்ட மில்லியனர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். அதிக அளவில் நன்கொடை வழங்கி வந்தாலும் சுஷ்மிதா மற்றும் சுப்ரோடா பாக்சி ஜோடி அதிகம் அறியப்படவில்லை.
ஆனால் அதிக அளவிலான நன்கொடை வழங்கிய தாராள உள்ளங்களில் இவர்களும் பங்காற்றியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ரூ.179 கோடி நன்கொடை வழங்கி ஒன்பதாவது இடத்தில் இந்த தம்பதியினர் இருக்கின்றனர்.
மருத்துவச் செலவுக்கு கஷ்டப்படும் நபர்களுக்காக வருடா வருடம் நன்கொடை வழங்கி வருகின்றனர். தங்கள் தொண்டு முயற்சியின் ஒரு பகுதியாக பாக்சி ஜோடி 2022-ஆம் ஆண்டில் ரூ.213 கோடியும், 2023-ஆம் ஆண்டில் ரூ.110 கோடியும், 2024-ஆம் ஆண்டில் ரூ.179 கோடியும் நன்கொடையாக வழங்கி உள்ளனர். அதோடு ஒடிசாவில் புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.340 கோடி நன்கொடை அளிப்பதாக 2021-ஆம் ஆண்டில் அறிவித்தனர்.
மைண்ட்ட்ரீ நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் ஐடி தொழிநுட்ப சேவையை வழங்கி வருகிறது. மைண்ட்ட்ரீ நிறுவனம் சுஷ்மிதா மற்றும் சுப்ரோட பாக்சி ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது. இதற்கு முன்னர் பல்வேறு நாவல்களை சுஷ்மிதா எழுதியுள்ளார் இவர் ஒரு ஒடியா எழுத்தாளர். சுஷ்மிதா மற்றும் சுப்ரோட இருவரும் மைண்ட்ட்ரீ-யை உருவாக்குவதற்கு முன்பு சமூக மாற்றங்களில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.56,643 கோடி. இந்த நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு சமூக மாற்றங்களில் ஈடுபட்டு வந்த இந்த ஜோடி, நிறுவனம் வளர்ந்த பின்னரும் அதை தொடர்கிறது. இந்த ஜோடியை பற்றிய உங்களுடைய கருத்து என்ன?
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications