பாட்டியாலா: அந்தக் காலத்து மன்னர்கள் என்றாலே போர், ஆட்சி முறை இவற்றை எல்லாம் தாண்டி அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கையும் மாட மாளிகைகளும் நமது நினைவுக்கு வரும். அப்படி தன்னுடைய ஆடம்பரத்தால் ஆங்கிலேயர்களையே ஆச்சர்யப்பட வைத்த ஒரு மன்னர் குறித்து தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
மகாராஜா பூபிந்தர் சிங் பாட்டியாலா இந்திய அரச வம்சங்களுள் ஒருவரான இவர் தான் இந்தியாவிலேயே முதன்முறையாக விமானம் வாங்கியவர் என வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1900 முதல் 1938 ஆம் ஆண்டு வரை பாட்டியாலாவை ஆட்சி செய்தவர் மகாராஜா பூபிந்தர் சிங். இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட. தன்னுடைய தந்தை மரணத்திற்கு பிறகு 9ஆவது வயதிலேயே மகாராஜாவாக அரியணையில் அமர்ந்தார்.
இவருக்கு 18 வயது நிறைவடையும் வரை இவரது பெயரில் அமைச்சரவை ஆட்சி செய்து வந்தது. 18 வயதை அடைந்த பிறகு இவரே நேரடியாக அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு ஆட்சி புரிய தொடங்கினார். அப்போது மிக ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இந்தியாவிலேயே சொந்தமாக விமானம் வாங்கிய முதல் நபர் இவர் தான். 1910ஆம் ஆண்டில் இவர் தன்னுடைய பொறியாளர்களை பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு அனுப்பி, இரண்டு Henry Farman விமானங்கள் மற்றும் ஒரு Blériot XI monoplane ஆகியவற்றை சொந்தமாக வாங்கினாராம்.
அதற்காக தனியாக ஒரு விமான ஓடுதளத்தையே கட்டமைத்தார் என்றும் வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. மகாராஜா பூபிந்தர் சிங் ஆடம்பர வாகனங்களை வாங்கி குவிப்பதில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டவர். அந்த காலத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இவர் வைத்திருந்ததாராம். தினம் ஒரு காரில் வலம் வருவாராம்.
இவர் ஒரு மன்னராக மட்டுமல்ல புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார். 1911 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணமாக சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இவர் பதவி வகித்ததாக சொல்லப்படுகிறது.
இவரது ஆட்சியின் கீழ் பாட்டியாலா லெவன் என்ற பெயரில் ஒரு கிரிக்கெட் அணியும், பாட்டியாலா டைகர்ஸ் என்ற பெயரில் ஒரு போலோ அணியும் இருந்தன. இவ்விரண்டு அணிகளும் பல போட்டிகளில் கலந்து கொண்டன.
தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு பல மனைவிகளும் துணைவிகளும் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு முறை இவர் பெட்டிகள் நிறைய வைரக்கல், மரகதம், மாணிக்கம் உள்ளிட்ட நவரத்தினங்களுடன் 40 பணியாளர்களை அழைத்து கொண்டு பாரீசுக்கு சென்றாராம்.
அங்கே இவர் கொண்டு வந்திருந்த நகைகளையும் கற்களையும் பார்த்தும் அனைவரும் வாயடைத்து போனார்களாம். அங்கே இருந்த புகழ்பெற்ற நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இவற்றை ஒப்படைத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 அடுக்கு சங்கிலிக்கு ஆர்டர் கொடுத்தாராம்.
அவரது விருப்பப்படியே 5 சங்கிலி அடுக்குகள் கொண்ட ஒரு நெக்லஸ், 2930 வைரக்கல் பதிக்கப்பட்டு வடிவமடைத்து அவரிடம் வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் உலகின் ஏழாவது பெரிய வைரமாக கருதப்பட்ட De Beers எனும் வைரக்கல் இந்த நெக்லஸின் மையப்பகுதியில் பதிக்கப்பட்டு இருந்தது.
இன்றைய நாள் வரை பிரான்ஸின் French luxury house Cartierக்கு இவ்வளவு பெரிய ஆர்டரை யாருமே கொடுத்தது இல்லை என்பதே இவரது ஆடம்பரத்தையும் செல்வத்தையும் நமக்கு உணர்த்தி விடும். இவ்வளவு விலை மதிப்பு கொண்ட நெக்லெஸ் பின்னாளில் மாயமாகிவிட்டது. அதன் சில பாகங்கள் மட்டும் ஆங்காங்கே கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications