அபிஷேக் மால் என்பவர் தனது லிங்க்டின் பக்கத்தில் ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். அதில் 26 வயதான நிகிதா மகேஸ்வரி என்பவர் தனது தொழிலை எவ்வாறு வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ஆண்களே அதிகம் வேலை செய்யும் சரக்கு போக்குவரத்து துறையில் நிகிதா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இன்று சோமணி டைல்ஸ், கஜாரியா, ஜான்சன் போன்ற 600-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் தங்கள் பொருட்களை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல நிகிதாவின் நிறுவனத்தையே நம்பியுள்ளன. நிகிதா அப்படி என்ன செய்கிறார் என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
புதிய முயற்சி: 2016-ஆம் ஆண்டில் நிகிதா வணிகங்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சிக்கல் குறித்து கண்டறிந்துள்ளார். அதாவது பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அவற்றை சரியான இடங்களுக்கு கொண்டு செல்ல ட்ரான்ஸ்போர்ட் வசதி இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். பொதுவாக உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களில் இருந்து வெவ்வேறு பகுதிக்கும் பொருட்களை கொண்டு செல்ல லாரி, வேன், ட்ரக் போன்றவற்றை நிறுவனங்கள் நம்ப வேண்டியுள்ளது. எனவே இதை ஒரு தொழிலாக மாற்ற நிகிதா முடிவு செய்தார்.

அதற்காக நிகிதா கொண்டு வந்தது தான் தட்காலாரி என்ற நிறுவனம். தட்காலாரி என்பது ஒரு ஆன்லைன் ட்ரான்ஸ்போர்ட் சேவையாகும். இதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பகுதி பகுதியாகப் பிரித்து பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
தட்காலாரி-யின் சிறப்பம்சங்கள்: பீங்கான் தொழிலுக்காக முதன்முதலாக தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கக்கூடிய போக்குவரத்து முறையாக உள்ளது. பீங்கான்களைப் பொறுத்தவரையில் ஒரு சிறு அதிர்வும் உற்பத்தி செய்த பொருட்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். எனவே எந்தவித அதிர்வையும் எதிர்த்து பொருட்களை உடையாமல் கொண்டு செல்லும் வகையில் இச்சேவை வழங்கப்படுகிறது.
இன்று, 600-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் இந்த ஸ்டார்ட்அப்பை நம்பி தங்கள் பொருட்களை தடையின்றி நகர்த்துகின்றன. 2019-ஆம் ஆண்டு தேசிய தொழில் முனைவோர் விருது போன்ற முக்கிய விருதுகளையும், குஜராத் அரசின் ஆதரவையும் பெற்று, தற்போது ஒரு தலைசிறந்த தொழில் முனைவோராக வலம் வருகிறார் நிகிதா.


Click it and Unblock the Notifications