பாகிஸ்தான்: இந்தியாவில் பணக்கார குடும்பம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது அம்பானி குடும்பம் தான். அந்த வகையில் பாகிஸ்தானிலும் பல்வேறு தொழில்களில் கால் பதித்து மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் ஒருவர்.
பொருளாதார நெருக்கடி, அரசியல் நிலையற்ற தன்மை என நமது அண்டை நாடான பாகிஸ்தான் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கிறது. குறிப்பாக அந்த நாட்டின் பொருளாதார நிலைமை என்பது மிக மோசமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலிலும் ஒருவரது சொத்து மதிப்பு மட்டும் குறையாமலேயே இருக்கிறது அவர் தான் மியான் முகமது மான்சா..

பாகிஸ்தான் மக்களுக்கு பணக்காரர் குழுமம் என்ற உடன் நினைவுக்கு வருபவர் மியான் முகமது மான்சா. பாகிஸ்தானின் முதல் பெரும் பணக்காரர் இவர். மியான் முகமது மான்சா 1941 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சினியட் பகுதியில் பிறந்தவர்.
இவர்களது குடும்பம் பாரம்பரியமாக ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்தது. மியான் முகமது இதனை பெரிய குழுமமாக மாற்றி பலதுறைகளில் வெற்றி கண்டு பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார்.
நிஷாத் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் மியான் முகமது மான்சா. இவரது தற்போதைய சொத்து மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிய வருகிறது.
லண்டனில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னாளில் பாகிஸ்தான் திரும்பினார். தந்தைக்கு சொந்தமான காட்டன் மில்லை எடுத்து நடத்த தொடங்கினார்.
நிஷாத் டெக்ஸ்டைல்ஸ் மில் என பெயர் மாற்றி பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆடை நிறுவனமாக உருவாக்கினார். இதனை அடுத்து பல்வேறு துறைகளில் கால் பதிக்க தொடங்கினார். சிமெண்ட், மின்சாரம், வங்கி மற்றும் காப்பீடு துறைகளில் இவர் முதலீடு செய்து 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
2010 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இவர் 937 வது இடத்தை பிடித்தார். இவர் மலேசியா மேபேங்க் என்ற வங்கியை 2008 ஆம் ஆண்டு நிறுவினார்.
பாகிஸ்தானை பொறுத்தவரை இவரும், இவரது குடும்பமும் தான் அதிக அளவில் அரசுக்கு வருமான வரி செலுத்துபவர்கள். இவர் வெளிநாடுகளிலும் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளார். இவரது மூதாதையர்கள் இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பே இவர்கள் பாகிஸ்தானின் பஞ்சாபிற்கு அங்கே ஆலைகளை நிறுவியுள்ளனர். மியான் முகமது மான்சா பாகிஸ்தானின் பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக அறக்கட்டளைகள் மூலம் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications