இப்படியும் ஒரு பணக்காரர் பட்டியல்... 8ஆம் இடம் பிடித்த எலான் மஸ்க்!

உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று அதிக குழந்தைகள் வைத்துள்ள உலக பணக்காரர் பட்டியல் ஒன்றை எடுத்துள்ளது. இந்த பட்டியலில் 9 குழந்தைகள் வைத்துள்ள எலான் மஸ்க் அவர்களுக்கு 8வது இடமே கிடைத்துள்ளது.

இவருக்கு முன்பாக அதிக குழந்தைகளுடன் பணக்காரர் பட்டியலில் உள்ள ஏழு பேர் யார் யார் என தற்போது பார்ப்போம்.

ஃபிராங்க் வாண்டர்ஸ்லூட் - 14 குழந்தைகள்

ஃபிராங்க் வாண்டர்ஸ்லூட் - 14 குழந்தைகள்

நன்கொடையாளர் என பெயர் பெற்ற வாண்டர்ஸ்லூட்டுக்கு முதல் திருமணத்தில் ஆறு குழந்தைகளும் தற்போதைய மனைவியிடமிருந்து எட்டு குழந்தைகளும் என மொத்தம் 14 குழந்தைகள் உள்ளனர். இவரது சொத்து மதிப்பு $3 பில்லியன்.

ஃபாரிஸ் வில்க்ஸ் - 11 குழந்தைகள்

ஃபாரிஸ் வில்க்ஸ் - 11 குழந்தைகள்

அமெரிக்க பெட்ரோலிய தொழிலதிபர் ஃபாரிஸ் வில்க் அவர்களின் நிகர சொத்து மதிப்பு $1.3 பில்லியன் ஆகும். வில்க்ஸ் மற்றும் அவரது மனைவி ஜோ ஆன் தம்பதிக்கு 11 குழந்தைகள் உள்ளனர்.

டேவிட் டஃபீல்ட் - 10 குழந்தைகள்

டேவிட் டஃபீல்ட் - 10 குழந்தைகள்

மென்பொருள் நிறுவனங்களான Workday மற்றும் PeopleSoft நிறுவனர், டஃபீல்ட் மற்றும் அவரது மனைவி செரில் ஆகியோருக்கு 10 குழந்தைகள் உள்ளனர். மேலும் இவருக்கு ஏழு பேரக்குழந்தைகளும் உள்ளனர் என்பதும் இவரது நிகர மதிப்பு $9.6 பில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஜெர்ரி மோயஸ் - 10 குழந்தைகள்

ஜெர்ரி மோயஸ் - 10 குழந்தைகள்

ஜெர்ரி மோயஸ் மற்றும் அவரது மனைவி விக்கி தம்பதி 10 குழந்தைகளை பெற்றுள்ளனர். இன்றைய நிலையில் மோயஸ் மற்றும் அவரது குடும்பத்தின் நிகர மதிப்பு $1.4 பில்லியன் ஆகும்.

நெல்சன் பெல்ட்ஸ் - 10 குழந்தைகள்

நெல்சன் பெல்ட்ஸ் - 10 குழந்தைகள்

ட்ரையன் ஃபண்ட் மேனேஜ்மென்ட்டின் நிறுவனர் மற்றும் ஆர்வலர் நெல்சன் பெல்ட்ஸ் அவர்களுக்கு மூன்று மனைவிகளும் 10 குழந்தைகள் உள்ளனர். இவரது சொத்து மதிப்பு 1.6 பில்லியன் டாலர்கள்.

ரிச்சர்ட் ஷூல்ஸ் - 10 குழந்தைகள்

ரிச்சர்ட் ஷூல்ஸ் - 10 குழந்தைகள்

ஸ்டீரியோ உபகரண கடையான சவுண்ட் ஆஃப் மியூசிக் உற்பத்தியாளரான இவருக்கு 10 குழந்தைகள் உள்ளனர். இவரது சொத்து மதிப்பு 3.8 பில்லியன் டாலர்கள்.

 ஃபிரடெரிக் ஸ்மித் - 10 குழந்தைகள்

ஃபிரடெரிக் ஸ்மித் - 10 குழந்தைகள்

FedEx நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஃபிரடெரிக் ஸ்மித் அவர்களுக்கு இரண்டு மனைவிகளும் 10 குழந்தைகளும் உள்ளனர். இவரது நிகர மதிப்பு $5.1 பில்லியன் ஆகும்.

 எலோன் மஸ்க் - 9 குழந்தைகள்

எலோன் மஸ்க் - 9 குழந்தைகள்

எலான் மஸ்க் தனது மனைவி ஜஸ்டின் வில்சனுடன் ஆறு குழந்தைகளுக்கு தந்தையானார். இந்த ஜோடிக்கு முதலில் இரட்டை குழந்தைகள் அதன் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்தனர். கனேடிய இசைக்கலைஞர் கிரிம்ஸுடன் மஸ்க்குக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நவம்பர் 2021ஆம் ஆண்டு நியூராலிங்க் சக ஊழியர் ஷிவோன் ஜிலிஸுடன் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததால் எலான் மஸ்க் அவர்களுக்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளனர். இவரது நிகர சொத்துமதிப்பு சுமார் 293 பில்லியன் டாலர் ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+