கொல்கத்தார்: வங்கப்புலி, தாதா, லிட்டில் மாஸ்டர் என பல்வேறு புனைப்பெயர்களால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் தான் சவுரவ் கங்குலி. 90ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடித்த ஒரு கிரிக்கெட் ஜாம்பவான். இவருடைய விளையாட்டு குறித்து நாள் முழுவதும் பேசினாலும் போதாது. கிரிக்கெட் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு சிறந்த தந்தையும் ஜொலிக்கிறார் சவுரவ் கங்குலி.
சவுரவ் கங்குலி எப்படி கிரிக்கெட்டில் ஜாம்பவானோ அப்படி அவருடைய மகள் சனா கங்குலி படிப்பில் ஜாம்பவானாக இருக்கிறார். ஆம் இளம்வயதிலேயே லட்சங்களில் சம்பளம் பெற்று பொருளாதாரத்தில் தான் ஒரு புலி என நிரூபணம் செய்துள்ளார். 2001ஆம் ஆண்டு பிறந்த சனா கங்குலி சிறு வயதில் இருந்தே படிப்பில் சுட்டி. சனா கங்குலி கொல்கத்தாவில் உள்ள லொரெட்டோ ஹவுஸ் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். 12ஆம் வகுப்பு தேர்வில் அவர் 98 சதவீதம் மதிப்பெண் எடுத்தார். அதன் பின்னர் வெளிநாடு சென்று பட்டப்படிப்பை தொடர்ந்தார்.

லண்டன் பல்கலைகழக கல்லூரியில் பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சில மாதங்கள் சான்றிதழ் படிப்பை முடித்தார். பொருளாதாரம், முதலீடு, நிதி மேலாண்மை ஆகியவற்றில் சிறப்பாக மதிப்பெண் பெற்றார். தன்னுடைய கல்லூரி படிப்பின் போதே பல்வேறு முன்னணி நிதி சார்ந்த நிறுவனங்களில் தொழில் பயிற்சியும் பெற்றார். HSBC, KPMG, Goldman Sachs, Barclays உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இதில் அடங்கும்.
ஜூன் 2022 முதல் உலகின் மிகப்பெரிய நிதி ஆலோசனை நிறுவனமான PwCஇல் இன்டர்னாக பணிபுரிந்தார். அதன் பின்னர் Deloitte நிறுவனத்திலும் சிறிது காலம் பணிபுரிந்த அனுபவம் இவருக்கு உண்டு. இங்கெல்லாம் பயிற்சி நிலை ஊழியர்களுக்கே ஆண்டுக்கு 30 லட்சம் வரை சம்பளம் கிடைக்குமாம். தற்போது innoverv என்ற லண்டனை சேர்ந்த நிறுவனத்தில் அவர் பணிபுரிந்து வருகிறார். 23 வயதிலேயே ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக பெரிய பிரபலங்களில் வாரிசுகள் தந்தையின் தொழிலை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் சனா கங்குலி தனக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அதில் வெற்றி பெற்று தான் வங்கப்புலியின் மகள் என்பதை நிரூபணம் செய்துள்ளார். சனா கங்குலியின் தாயார் டோனா கங்குலி, ஒடிசி நடனக் கலைஞராகப் பயிற்சி பெற்றவர். அவரை போலவே சனாவும் சிறு வயதிலேயே நடன பயிற்சி பெற்றவராம்.
Story written: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications