சென்னை: ஸ்ரேயா கோஷல், இந்திய இசை உலகில் தனித்துமான பாடல்களுக்காக பிரபலமானவர். அவர் தனது மெல்லிசை குரலால் அனைத்து வயதினரையும் கவர்ந்து, பல்வேறு வெற்றிகரமான பாடல்களை வழங்கியுள்ளார். ஸ்ரேயா கோஷலின் வாழ்க்கை துணை ஒரு மிகப்பெரிய தொழில்துறை நிறுவனத்தின் இணை தலைவராக இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தப் பதிவில் ஸ்ரேயா கோஷல் கணவரின் பின்னணி குறித்து பார்ப்போம்.
ஸ்ரேயா கோஷல் கணவரான சிலாதித்யா, ஏப்ரல் 2022 முதல் Truecaller-இன் பிஸினஸ் பிரிவின் உலகளாவிய தலைவராக இருந்து வருகிறார். 2009-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நிறுவப்பட்ட Truecaller நிறுவனம், 2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் SEK 1,740.4 மில்லியன் (சுமார் ரூ. 1406 கோடி) மொத்த வருவாயை ஈட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கிறது. Truecaller-இன் ஆக்ட்டிவ் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 374 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்தியா Truecaller நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும், மேலும் 2023ஆம் நிதி ஆண்டில், நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாயில் 75.8% இந்தியாவிலிருந்தே கிடைத்துள்ளது.

ஷிலாதித்யா முகோபாத்யாயா பிசினஸ் டெவலப்மெண்ட், மொபைல் அப்ளிகேஷன், சாப்ட்வேர் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட், ப்ராடக்ட் மேனேஜ்மென்ட், ஆட்டோமேஷன் சிஸ்டம்ஸ் இண்டெகரேஷன் ஆகியவற்றில் நிபுணராக உள்ளார் என்று அவருடைய லிங்க்டின் பயோ கூறுகிறது. ஷிலாதித்யா முன்பு கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட SaaS நிறுவனமான CleverTap-இல் விற்பனை இயக்குனராகவும் பின்னர் விற்பனையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். முகோபாத்யாயா மும்பை பல்கலைக்கழகத்தில் மின்னணுவியலில் BE பட்டம் பெற்றவர்.
ஸ்ரேயாவும் ஷிலாதித்யாவும் குழந்தை பருவத்திலிருந்தே காதலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஒரு நேர்காணலில், ஸ்ரேயா கோஷல் ஒரு நண்பரின் திருமணத்தின் போது முகோபாத்யாயா தன்னிடம் காதலை முதலில் கூறியதாகக் குறிப்பிட்டிருப்பார்.
ஷிலாதித்யா முகோபாத்யாயாவின் ஸ்டார்ட்அப்கள்: முகோபாத்யாயா இரண்டு ஸ்டார்ட்அப்களை நிறுவியுள்ளார். ஒன்று ஹிப்காஸ்க் எனப்படும் அப்ளிகேஷன், இது பயனர்களுக்கு ஒயின் சேகரிப்புகளைத் தேர்வு செய்ய உதவுகிறது மற்றொன்று Pointshelf என்று சொல்லப்படுகிற சிறு வணிகங்களுக்கான பேமெண்ட் செயலி ஆகும்.
5 முறை தேசிய திரைப்பட விருது பெற்ற பாடகி ஸ்ரேயா கோஷல். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசைக்கலைஞர்களில் இவரும் ஒருவராவார். இவருடைய நிகர மதிப்பு 180-185 கோடி ரூபாய் என நியூஸ்18 தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications