மைக்ரோசாப்ட்-க்கு ஆதாரமாக இருந்த இந்தியர்.. சத்ய நாதெல்லா இல்லை.. யார் இவர்?

இந்தியாவில் பிறந்த தொழில்முனைவோரான சபீர் பாடியா, தொழில்நுட்ப உலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் உருவாக்கிய ஹாட்மெயில், முதல் இன்டர்நெட் அடிப்படையிலான மின்னஞ்சல் சேவைகளில் ஒன்றாகும். தனது நண்பரான ஜாக் ஸ்மித் உடன் இணைந்து, 1996-ஆம் ஆண்டில் ஹாட்மெயிலை உருவாக்கினார். இது மக்கள் மின்னஞ்சல்களை அனுப்பும் விதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஹாட்மெயிலுக்கு முன், மின்னஞ்சல் சேவைகள் குறிப்பிட்ட சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. இதனால், பயனர்கள் தங்கள் கணக்கு பதிவு செய்யப்பட்டிருந்த கணினியிலிருந்து மட்டுமே தங்கள் இன்பாக்ஸ்களை பயன்படுத்த முடியும். ஹாட்மெயில், இன்டர்நெட் கொண்ட எந்த சாதனத்திலிருந்தும் மக்கள் தங்கள் மின்னஞ்சல்களை பார்க்க அனுமதித்து புரட்சியை ஏற்படுத்தியது. 1996-ஆம் ஆண்டு, ஜூலை 4-ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஹாட்மெயில், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களை ஈர்த்தது.

மைக்ரோசாப்ட்-க்கு ஆதாரமாக இருந்த இந்தியர்.. சத்ய நாதெல்லா இல்லை.. யார் இவர்?

1997-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 18 மாதங்களுக்குப் பிறகு, ஹாட்மெயிலுக்கு உலகளவில் சுமார் 8.5 மில்லியன் பயனர்கள் இருந்தனர். ஹாட்மெயிலின் விரைவான வளர்ச்சி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில், மைக்ரோசாப்ட் ஹாட்மெயிலை $140 மில்லியனுக்கு வாங்க முன்வந்தது. இருப்பினும், பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பாடியா மற்றும் ஸ்மித் இறுதியாக 1997-ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு $400 மில்லியனுக்கு ஹாட்மெயில் சேவையை விற்றனர். இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.2,950 கோடி.

ஹாட்மெயில் கையகப்படுத்தப்பட்ட பிறகு, பாடியா மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஒரு வருடம் பணிபுரிந்தார். அவர் JaxtrSMS, ஒரு செய்தியிடல் சேவை மற்றும் Arzoo Inc போன்றவற்றையும் உருவாக்கினார். இருப்பினும், இந்த இரண்டும் ஹாட்மெயிலின் வெற்றியைப் போல இல்லை. எனவே அவை சீக்கிரம் மூடப்பட்டன.

2021-ஆம் ஆண்டில், பாடியா அஜி ஆபிரகாமுடன் இணைந்து AI மூலம் இயங்கும் கற்றல் தளமான ShowReel-ஐ நிறுவினார். இந்த முயற்சியானது, ஹாட்மெயில் போன்ற பரவலான வெற்றியை இன்னும் அடையவில்லை என்றாலும், தொழில்நுட்ப உலகில் புதிதாக ஒன்றை உருவாக்கும் அவரது சமீபத்திய முயற்சியாகவுள்ளது.

சபீர் பாடியாவின் நிகர மதிப்பு:சபீர் பாடியா தனது வாழ்க்கையில் சில பின்னடைவுகள் இருந்தாலும், சபீர் பாடியாவின் நிகர மதிப்பு சுமார் ரூ .1,660 கோடியாக உள்ளது. இவர் டிசம்பர் 30-ஆம் தேதி, 1968-ஆம் ஆண்டு இந்து குடும்பத்தில் பிறந்தார். அவர் 2008-ஆம் ஆண்டில் தன்யா ஷர்மாவை மணந்தார். அவர்களுக்கு அரியானா என்ற மகள் உள்ளார். துரதிர்ஷ்டவசமாக, 2013-ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற விண்ணப்பித்தனர்.

ஹாட்மெயிலின் அற்புதமான வெற்றியை பாடியாவால் பிரதிபலிக்க முடியவில்லை என்றாலும், தொழில்நுட்ப உலகில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஹாட்மெயில் இறுதியாக மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பலராலும் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையாக மாற்றப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+