Infosys நாராயண மூர்த்தி எல்லாம் அவருக்கு முன்னாட்டி ஒன்னுமே இல்லை.. யார் இந்த கோபால்..?!

சில காலமாக இந்தியாவில் பில்லியனர்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டில் 75 பேர் பில்லியனர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். Hurun India Rich List 2024 அறிக்கையின் படி இந்தியாவில் 334 பில்லியனர்கள் உள்ளனர். வெளியான பில்லியனர்களின் பட்டியலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயண மூர்த்தியும் ஒருவர். பெங்களூரின் 5-வது பணக்காரராகவும் நாட்டின் 69-வது பணக்காரராகவும் இருக்கும் நாராயண மூர்த்தியை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பின்னுக்கு தள்ளியுள்ளார். யார் இந்த நபர்? என்பது குறித்து பார்ப்போம்.

அறிக்கையின்படி நாராயண மூர்த்தியின் நிகர மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.36,600 கோடி. ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் இணைய நிறுவனரான சேனாபதி கோபாலகிருஷ்ணன் நாராயண மூர்த்தியை பின்னுக்குத் தள்ளி இருக்கிறார். 1981-ஆம் ஆண்டில், நாராயண மூர்த்தி NS ராகவன், அசோக் அரோரா, நந்தன் நிலேகனி, SD ஷிபுலால், கே தினேஷ் மற்றும் சேனாபதி கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவினார்.

Infosys நாராயண மூர்த்தி எல்லாம் அவருக்கு முன்னாட்டி ஒன்னுமே இல்லை.. யார் இந்த கோபால்..?!

அதன் பிறகு வெகுவிரைவில் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் 2023-ஆம் ஆண்டில் 18.2 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டிய உலகளாவிய நிறுவனமாக இன்போசிஸ் மாறியது. இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.1,562 கோடி. ஆனால் ஆரம்ப முதலீட்டுக்காக சுதா மூர்த்தி கொடுத்த ரூ.10,000 முதலீட்டில் இன்போசிஸ் நிறுவனம் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சேனாபதி கோபாலகிருஷ்ணன் யார்? 69 வயதான சேனாபதி கோபாலகிருஷ்ணன் தற்போது ஆக்ஸிலர் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தங்களுடைய வணிகத்தை அதிகரிக்க உதவும் நிறுவனம் ஆகும். 2007-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை இன்ஃபோசிஸ்-இன் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். அதன் பிறகு 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை இன்போசிஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார்.

மின்டின் அறிக்கையின்படி கோபாலகிருஷ்ணனின் நிறுவனமான ஆக்ஸிலர் வென்ச்சர்ஸ் குட் ஹோம், காகஸ் போன்ற பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்த சேனாபதி கோபாலகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் இயற்பியல் மற்றும் கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.

நிகர மதிப்பு: சேனாபதி கோபாலகிருஷ்ணனின் நிகர மதிப்பு ரூ.38,500 கோடி என 2024-ஆம் ஆண்டின் Hurun India Rich List-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டில் இந்திய அரசு சேனாபதி கோபாலகிருஷ்ணனுக்கு இந்தியாவிலேயே மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை வழங்கியது.

கோபாலகிருஷ்ணன் இன்ஃபோசிஸ் சேனாபதி கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவியான சுதா கோபாலகிருஷ்ணன் இணைந்து மூளை ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும் பிரதீஷா டிரஸ்ட் என்ற அமைப்பை நிர்வகித்து வருகின்றனர். அதோடு ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி பெங்களூரு போன்ற நிறுவனங்களின் அறங்காவலர் குழுவிலும் கோபாலகிருஷ்ணன் பணியாற்றுகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+