பணக்காரர்கள் பலர் சொகுசு கார்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட் ஃபோன்கள் என பயன்படுத்தி வரும் சூழலில் ராமமூர்த்தி தியாகராஜன் என்ற தொழிலதிபர் தனித்து நிற்கிறார். அதற்கான காரணம் சுமார் 1.10 லட்சம் கோடி சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான இவர் ஆடம்பரத்தை தவிர்த்து ஒரு சாதாரண வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரை ஓட்டும் ஒரு கோடீஸ்வரரை சற்று கற்பனை செய்து பாருங்கள்? அப்படிப்பட்ட ஒருவர்தான் இந்த ராமமூர்த்தி தியாகராஜன். இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவருக்கென சொந்தமாக மொபைல் போன் கூட இல்லையாம்.
1960-ஆம் ஆண்டில் ஸ்ரீராம் குழுமத்தை நிறுவியவர் ராமமூர்த்தி தியாகராஜன். ஒரு சிட் பண்ட் நிறுவனமாக தொடங்கிய ஸ்ரீராம் குழுமம் இன்று 1.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாம்ராஜ்யமாக மாறியுள்ளது. இத்தகைய வெற்றியை ராமமூர்த்தி தியாகராஜன் எப்படி பெற்றார்?

அவரது தனித்துவமான நிதி அணுகுமுறையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. முதன்முதலாக தியாகராஜன் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது வங்கிகள் சில நேரங்களில் பலருக்கு கடனுதவி வழங்குவதை புறக்கணிப்பதை பார்த்து உள்ளார். குறிப்பாக லாரி டிரைவர்கள் மற்றும் பிற குறைந்த வருமானம் ஈட்டும் நபர்களுக்கு கடன் வழங்காததை குறி வைத்து அவர்களுக்கு நிதி உதவி வழங்க ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இதனால் அவருடைய நிறுவனம் வேகமாக வளரத் தொடங்கியது.
என்னதான் அவருடைய நிறுவனம் வெகு சீக்கிரமாக வளர்ச்சியடைந்து இன்று 1.10 லட்சம் கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்தாலும்.. தியாகராஜனின் வாழ்க்கை முறை அவருடைய பணிவுக்கு சான்றாகவே விளங்குகிறது. நாட்டில் வாழும் பெரும் செல்வந்தர்கள் பல கோடி ரூபாயில் சொகுசு கார்களையும் ஸ்மார்ட் ஃபோன்களையும் பயன்படுத்தி வரும் இன்றைய சூழலில்.. இன்னும் தியாகராஜன் 6 லட்ச ரூபாயிலான காரைத் தான் ஓட்டி வருகிறார்.
மேலும் நவீன தொழில்நுட்பத்தில் இருந்து சற்று விலகி இருக்கவே விரும்புகிறார். இவ்வளவு செல்வத்தை வைத்திருக்கும் இவரிடம் மொபைல் போன் இல்லையாம். அது மட்டும் இன்றி சுமார் 250 மில்லியன் நிறுவனத்தின் பங்குகளை விற்று வருமானத்தை ஒரு அறக்கட்டளைக்கு அர்ப்பணித்து உள்ளார் தியாகராஜன்.
ராமமூர்த்தி தியாகராஜனின் கதை உண்மையான செல்வம் என்பது வெறும் பொருள் வளத்தை வைத்திருப்பது மட்டுமல்ல. அது உலகில் நாம் ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்தது என்பதை நிருபிக்கும் வகையில் உள்ளது. ஆடம்பரத்திற்கு அடிமையாகும் உலகிலும் சிலர் பணம் இருந்தும் எளிமையான வாழ்க்கை வாழ முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications