மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மும்பையில் வசிக்கும் வீடு ஆண்டிலியா என அழைக்கப்படுகிறது. ஆண்டிலியாவை சுற்றி அதாவது முகேஷ் அம்பானிக்கு பக்கத்து வீட்டுக்காரராக இருப்பவர்கள் எல்லாமே இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்கள் தான் தெரியுமா?..
மும்பையில் உள்ள ஆண்டிலியா வீடு நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த வீட்டை கட்டி முடிக்கவே நான்கு வருடங்கள் ஆனதாம். உலகின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களே நவீன வசதிகளுடன் இந்த வீட்டை வடிவமைத்துள்ளனர்.

மிகப் பெரிய தோட்டம், ஸ்பா, உடற்பயிற்சி மையம் என அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நவீன வசந்த மாளிகை என கூறலாம். 27 மாடிகளை கொண்டுள்ள இந்த வீட்டில் 600க்கும் மேற்பட்டோர் பணியாளர்களாகவே வேலை செய்கின்றனர். ஆண்டிலியா மட்டுமே இத்தனை பிரம்மாண்டம் என்றால் இதை சுற்றி வசிப்பவர்களும் கூட பிரபலங்களாகவே இருக்கின்றனர்.
மோதிலால் ஓஸ்வால்: இந்தியாவின் முக்கியமான தொழிலதிபரான மோதிலால் ஓஸ்வாள் கிட்டத்தட்ட 1.5 பில்லியன் சொத்து மதிப்பு கொண்டவர். இவர்தான் முகேஷ் அம்பானியின் அண்டை வீட்டுக்காரர். 2020 ஆம் ஆண்டில் மோதிலால் ஓஸ்வால் இந்த பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகளை வாங்கினார் . ஒரு சதுர அடி ஒன்றரை லட்சம் ரூபாய் என்ற மதிப்பில் இவர் வாங்கியுள்ளார் என்றால் வீட்டில் மதிப்பே பல கோடிகளாக இருக்கும்.
ராணா கபூர்: எஸ் வங்கியின் நிறுவனரான ராணா கபூர் ஆண்டிலியா அமைந்துள்ள அல்டாமவுண்ட் சாலையில் தான் வசிக்கிறார். இவர் இந்த வீட்டினை 2013 ஆம் ஆண்டில் 128 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
என் சந்திரசேகரன்: டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என் சந்திரசேகரன் ஆன்டிலியாவிற்கு அருகில் உள்ள வீட்டில் தான் 5 ஆண்டுகளாக வசிக்கிறார்.
ஹர்ஷ் ஜெயின்: ட்ரீம்11 செயலியின் துணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் மற்றும் அவரது மனைவி ரச்சனா ஜெயின் ஆகியோரும் இந்த எலைட் தெருவில் தான் வசிக்கின்றனர் .இவர்கள் 72 கோடி மதிப்பிற்கு 2021 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஒரு டியூப்லெக்ஸ் வீட்டை வாங்கினர்.
பிரசாந்த் ஜெயின்: ஜே எஸ் டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரசாந்த் ஜெயின் ஆன்டிலியாவிற்கு அருகிலேயே ஒரு சொகுசு குடியிருப்பினை வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு 45 கோடி ரூபாய் ஆகும்.
கௌதம் சிங்கானியா : ஆண்டிலியாவிற்கு அருகிலேயே 6000 கோடி ரூபாய் மதிப்பிற்கு குடியிருப்பை வைத்திருப்பவர் ரேமண்டின் கௌதம் சிங்கானியா. இது பரவலாக ஜே கே ஹவுஸ் என அந்த பகுதியில் இருப்பவர்களால் அழைக்கப்படுகிறது. 30 அடுக்கு மாடி கொண்ட இந்த கட்டடத்தில் இல்லாத வசதிகளே இல்லை என கூறலாம்.
திரைப்பிரபலங்கள்: புகழ்பெற்ற பாலிவுட் நடிகரான குரு தத் இதே பகுதியில் தான் வசித்து வந்தார். ஆனால் தன்னுடைய 39 வது வயதிலேயே அவர் இறந்து விட்டார். மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் இதே பகுதியில் தான் வசித்து வந்தார். அதேபோல ஆஷா போஸ்லேவும் இதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசித்து வந்தார்.
இப்படி பெரும் கோடீஸ்வரர்களும் பல்வேறு பிரபலங்களும் இருக்கக்கூடிய பகுதியில் தான் ஆன்டிலியா அமைந்துள்ளது. எனவே அல்டாமவுண்ட் சாலை இந்தியாவின் கோடீஸ்வரர் சாலை என அழைக்கப்படுகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications