இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பவர் கெளதம் அதானி. சில வாரங்களுக்கு முன் இவரது நிகர சொத்து மதிப்பு திடீரென 13 பில்லியன் டாலராக அதிகரித்தது. அதன்படி, அதானியின் தற்போதைய நிகர மதிப்பு 68.4 பில்லியன் டாலராக உள்ளது. எரிசக்தி, ரியல் எஸ்டேட், தளவாடங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் முதலீடுகளையும், பங்குகளையும் வைத்திருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் விமான நிலையங்களை இயக்கும் நிறுவனமும் கௌதம் அதானியுடையது தான். ஆசியாவின் மிகப்பெரிய நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டமான தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தில் சுமார் ரூ.28,000 கோடியை முதலீடு செய்து அதானி குழுமம் பரபரப்பையும் கிளப்பியிருந்தது. இந்த சூழலில், கெளதம் அதானியின் சாம்ராஜ்யத்தை வலுப்படுத்தும் அவரது முக்கிய நிறுவனச் சொத்துக்கள் என்னென்ன என்று தற்போது பார்ப்போம்.

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (Adani Enterprises Ltd - AEL) : நாட்டின் மிகப்பெரிய பொதுப் பட்டியலில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் முக்கியமானது. இதன் கீழ், அதானி குழுமம் டேட்டா சென்டர்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி கண்டுபிடிப்புகள், எஃப்.எம்.சி.ஜி, சுரங்க சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை செயல்பட்டு வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி, அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் ஆண்டு வருவாய் ரூ.21,960 கோடி ஆகும். இதன் நிகர வருமானம் ஏறக்குறைய ரூ.734.41 கோடியாகும். இந்தக் குழுமத்தின் நிறுவனத்தில் கெளதம் அதானி 49.7% பங்குகளை வைத்துள்ளார்.
அதானி போர்ட்ஸ் (APSEZ) : அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள் நிறுவனமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு சரக்குப் போக்குவரத்தில் நான்கில் ஒரு பகுதியை இது கையாண்டு வருகிறது. சுமார் ரூ.22,000 கோடிக்கு அதிகமான நிகர சொத்துக்களை APSEZ கொண்டுள்ளதுடன், இந்தியாவின் கடற்கரைகளில் மிகப்பெரிய கப்பல்களையும் இயக்கி வருகிறது.
அதானி பவர் லிமிடெட் (Adani Power Ltd) : இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல் மின் உற்பத்தியாளராக அதானி பவர் திகழ்கிறது. முக்கிய மாநிலங்களில் 12-க்கும் மேற்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை இது கொண்டுள்ளது. இந்த நிலையங்கள் 18,110 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அதானி பவர் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.84,000 கோடிக்கு மேல் உள்ளது.
அதானி எனர்ஜி (Adani Energy) : இந்தியாவின் மின் துறையில் இந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது 93,2000 MVA மின்சாரத்தை மாற்றும் திறன் கொண்டது. சுமார் ரூ.47,487 கோடி சந்தை மதிப்புள்ள இந்த நிறுவனத்தில் கெளதம் அதானி 50% பங்குகளை வைத்துள்ளார்.
அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) : எரிசக்தித் துறையில் அதானி குழுமம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. காற்றாலை, சூரியசக்தி மற்றும் கலப்பின மின் திட்டங்களை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தையும், குஜராத்தில் ஒரு காற்றாலை நிலையத்தையும், ஜெய்சால்மரில் ஒரு கலப்பின மின் நிலையத்தையும் இது இயக்கி வருகிறது.
அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் (Adani Total Gas Ltd) : இந்த நிறுவனம் தொழில் துறை, வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோக வாடிக்கையாளர்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை (CNG) நேரடியாக வழங்கி வருகிறது.
முக்கிய வளர்ச்சித் திட்டம்: அதானி குழுமம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டமான தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தில் சுமார் ரூ.28,000 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்தத் திட்டம் மும்பையின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழுமத்தின் சுமார் 33% பங்குகள் இந்தத் திட்டத்தில் ரூ.95,000 கோடிக்கும் மேல் மதிப்புடையதாக உள்ளது.


Click it and Unblock the Notifications