வெளிநாட்டு அழகு சாதன பிராண்டுகள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில் இருந்து இந்தியாவில் வசிக்கும் மக்களின் சரும நிறங்களுக்கு ஏற்றவாறு தயாரிப்புகள் வருமா என்ற கேள்வி இருந்தது. இந்த இடைவெளியை கவனித்து அதை முற்றிலும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டவர் தான் வினிதா சிங். இவருடைய நிறுவனமான சுகர் காஸ்மெட்டிக்ஸ் (Sugar Cosmetics) அழகு சாதன பொருட்கள் விற்பனையில் தற்போது பெரிய சிகரத்தை அடைந்துள்ளது. சுமார் 500 கோடி மதிப்பிலான காஸ்மெட்டிக்ஸ் பிராண்டை உருவாக்கி சாதனை படைத்த வினிதா சிங்கின் பயணம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
சுகர் காஸ்மெட்டிக்ஸ் என்ற பிராண்டை உருவாக்கிய வினிதா சிங், வெற்றிகரமான தொழில்முனைவோருக்கு முன்மாதிரியாக மாறியுள்ளார். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் பிறந்த வினிதா, இளம் வயதில் RK புரத்தில் இருக்கும் டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்தார். 2007-ஆம் ஆண்டில் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டமும், 2015-ஆம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டமும் பெற்றார்.

வினிதா சிங் உருவாக்கிய சுகர் காஸ்மெட்டிக்ஸ் பிராண்ட் இந்தியப் பெண்களின் அழகு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருந்ததால் வேகமாக பிரபலம் அடையத் தொடங்கியது. இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களைப் பயன்படுத்தி வினிதா சிங் தனது தயாரிப்புகளை திறம்பட மார்க்கெட்டிங் செய்தார். இதனால் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் சுகர் காஸ்மெட்டிக்ஸ் பிராண்ட் வளரத் தொடங்கியது.
சுகர் காஸ்மெட்டிக்ஸ் வெறும் 8 ஆண்டுகளில் ரூ. 500 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டியது. போட்டி கடுமையான அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டது. வினிதா மட்டுமின்றி அவருடைய கணவர் கௌஷிக் முகர்ஜியும் வினிதாவின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார். மேலும் சுகர் காஸ்மெட்டிக்ஸ் பிராண்டை விரிவுபடுத்தி வெற்றி பெறச் செய்யவும் பக்க பலமாக இருந்துள்ளார்.
வினிதா தனது வணிகத்தில் மட்டுமல்லாமல் அதைத் தாண்டியும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் 6 மாத கால கர்ப்பிணியாக இருந்தபோது மும்பை மாரத்தான் உட்பட 20 மாரத்தான் மற்றும் அல்ட்ராமாரத்தான்களில் உடற்பயிற்சி ஆர்வலராக பங்கேற்றுள்ளார். உடல் நலத்திற்கான அவரது அர்ப்பணிப்பு, தனது தொழில் மேல் அவர் கொண்டிருக்கும் பற்று போன்றவை இன்று 500 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு அவருக்கு பெரிதும் உதவியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். திருமணம் செய்து கொண்டால் பல்வேறு தடைகள் வந்துவிடும் என்று எண்ணும் இல்லத்தரசிகளுக்கு இவருடைய கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications