மத்திய பிரதேசம்: 1947ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பலரும் தங்களுடைய உடைமைகளை இழந்தனர். அப்படி அனைத்தையும் இழந்து நின்ற தன்னுடைய குடும்பத்திற்கு உறுதுணையாக வேலைக்கு செல்ல தொடங்கி பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை ஒருவர் உருவாக்கியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வினோத் அகர்வால் , அகர்வால் கோல் கார்ப்பரேஷன் எனப்படும் இந்தியாவின் முன்னணி நிலக்கரி நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கு 15 வயதாக இருந்த போது தான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஆகியவை நிகழ்ந்தது. இதில் இவரது குடும்பம் அனைத்தையும் இழந்து நின்றது. 15 வயதான வினோத் அகர்வால் வேலைக்கு குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதனை வாழ்க்கை பாடமாக எடுத்து வினோத் அகர்வால் படிப்படியாக நிலக்கரி தொழிலில் கால்பதித்தார். பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாமல் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நிலக்கரித்துறையில் அசைக்க முடியாத ஒரு நபராக திகழ்ந்து வருகிறார்.

2024 ஆம் ஆண்டு ஹரன் பணக்காரர்கள் பட்டியலில் வினோத் அகர்வால் மற்றும் அவர்கள் குடும்பம் 394 ஆவது இடத்தை பிடித்திருந்தது . 1974 ஆம் ஆண்டு வினோத் அகர்வால் , அகர்வால் கோல் கார்ப்பரேஷன் என்ற நிலக்கரி நிறுவனத்தை தொடங்கினார் . குறிப்பிட்ட சில நபர்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த நிலக்கரித்துறையில் ஒரு சாதாரண மனிதராக நுழைந்து மிகப்பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறார்.
தற்போது உலகின் முன்னணி நிலக்கரி ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக அகர்வால் கோல் கார்ப்பரேஷன் இருக்கிறது. உலகம் முழுவதும் 1500 வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் நிலக்கரி சப்ளை செய்கிறது . இந்தியாவில் ஆதித்யா பிர்லா , டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிலக்கரியை இந்த நிறுவனத்திடம் இருந்துதான் வாங்குகின்றன. இந்த நிறுவனம் ஒரு ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மட்டுமில்லாமல் உலக முழுவதும் இருக்கும் நிலக்கரி நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரியை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது இந்நிறுவனம்./ அகர்வால் குழுமபத்தை பொறுத்தவரை நிலக்கரி தொழில் மட்டும் இல்லாமல் மத்திய பிரதேச மாநிலத்தில் கல்வி குழுமம் ஒன்றை தொடங்கி 4500 மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி ஏழ்மையில் இருக்கும் மாணவர்களின் கல்விக்காக உதவி வருகின்றனர். வினோத் அகர்வாலின் மகன் தபன் அகர்வால் தற்போது ரியல் எஸ்டேட் துறையிலும் கால்பதித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications