பாகிஸ்தானை விட்டு 10 வயதில் இந்தியா வந்து சாதித்த பெண்! 16ல் திருமணம், ரூ.8000 கோடி சாம்ராஜ்ஜியம்!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடி பெயர்ந்து தற்போது 8000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் ஒரு பெண். 1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது மத ரீதியான பல்வேறு கலவரங்களும், வன்முறைகளும் நடைபெற்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்த பலரும் இந்தியாவில் குடி பெயர்ந்தனர்.

ஆனால் இந்த பயணம் அத்தனை எளிதாக இருக்கவில்லை. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடி பெயர்ந்தவர்தான் சரளா அகுஜா. பாகிஸ்தானின் சிந்து தான் இவரது பூர்வீகம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அவருக்கு 10 வயது.

பாகிஸ்தானை விட்டு 10 வயதில் இந்தியா வந்து சாதித்த பெண்! 16ல் திருமணம், ரூ.8000 கோடி சாம்ராஜ்ஜியம்!

தன்னுடைய பூர்வீகத்தை விட்டு இந்தியாவுக்கு குடிபெயர வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.தன்னுடைய 10 வயதில் பாகிஸ்தானில் இருந்து அவர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார் . குடும்பத்தின் வறுமை காரணமாக சிறுவயதில் இருந்தே இவர் ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலைக்கு சென்றார்.

பல்வேறு தொழிற்சாலைகளில் சென்று இவர் பணி புரிந்தார். 16 வயதில் இவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு சிறு வயதிலேயே பல்வேறு சவால்களை சந்தித்த அவர் இரண்டு ஆண்டுகளாக படிப்படியாக பணத்தை சேமித்து வைத்து 1974 ஆம் ஆண்டு 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

ஆரம்ப கட்டத்தில் ஒரு பெண்ணாக தொழிலை தொடங்கி நடத்துவது இவருக்கு பல சவால்களை கொண்டு வந்தது. அந்த சவால்களை இவர் மனம் தளராமல் கடந்து வந்தார். இவரது நிறுவனம் விரிவடையத் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கெல்லாம் ஆடைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

தங்கள் குடியிருப்புகளை சுற்றி இருந்த வீடுகளுக்கு எல்லாம் சென்று அங்கே வறுமை நிலையில் இருந்த பெண்களை சந்தித்து பேசி அவர்களை எல்லாம் தன்னுடைய ஆலையில் பணிக்கு சேர்த்தார். பின்னர் இவரது பிள்ளைகள் வளர்ந்து ஆளாகினர். 1990களில் இவரது மகன்களான ஹரிஷ் மற்றும் சுனில் ஆகிய இருவரும் தொழிலில் பங்கேற்ற தொடங்கினர். இதன் மூலம் இவர்களது நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக உருவானது.

தற்போது இந்த நிறுவனம் 8 மாநிலங்களில் 50 ஆடை உற்பத்தி ஆலைகளை கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 2023 ஆம் ஆண்டு 8244 கோடி என அதிகரித்துள்ளது. GAP, H&M, Zara, Walmart உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எல்லாம் இந்த நிறுவனம் துணிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+