உலக அழகி போட்டி, பிரபஞ்ச அழகி போட்டி இந்த மாதிரி அழகிகள் போட்டிங்களை தான் இந்த உலகம் பார்த்திருக்கிறது. இது ஏஐ(AI) காலம் என்பதால் ஏஐ அழகி போட்டிகளும் வந்துவிட்டன. உலகிலேயே முதன்முறையாக் மிஸ் ஏஐ பியூட்டி பிஜெண்ட் அதாவது செயற்கை நுண்ணறிவு அழகிகளுக்கான போட்டி நடைபெற இருக்கிறது.
சாட் ஜிபிடி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு துறை நாம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இப்படி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அழகிகளுக்கான போட்டி என்பது நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு ஏஐ மாடலும் கலந்து கொள்ள இருக்கிறார் என்பதுதான் மற்றொரு சுவாரசியம்.
சாரா சதாவரி(Zara Shatavari) இந்தியாவை சேர்ந்த ஏஐ மாடல். தற்போது சர்வதேச ஏஐ உலக அழகி போட்டியில் முன்னணியில் இருக்கிறார். ஃபேன்வியூ(FAN VUE) என்ற ஒரு அமைப்பு முதன்முறையாக சர்வதேச அளவில் இப்படி ஏஐ மாடலகளுக்கான அழகி போட்டியை நடத்தி வருகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து 1500 மாடல்கள் இதில் போட்டியிட்டனர். அழகு, தொழில்நுட்ப அறிவு மற்றும் சமூக ஊடகங்களில் அவர்களுக்கு உள்ள ஃபாலோவர்கள் ஆகிய மூன்றின் அடிப்படையிலும் முதல் 10 பேரை ஃபேன்வியூ அமைப்பு தேர்வு செய்துள்ளது.
சாரா சதாவரி ராகுல் சவுத்ரி என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு ஏஐ மாடலாகும். இந்தியன் மொபைல் ஏட் ஏஜென்சி என்ற நிறுவனத்தின் துணை நிறுவனரான ராகுல் சவுத்ரி தங்கள் நிறுவன விளம்பர நோக்கங்களுக்காக சாரா சதாவரி என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கினார்.
சாராவுக்கென தனியாக ஒரு இணையதள பக்கத்தையும் அவர் தொடங்கினார். அதில் உடல் நலம், வேலைவாய்ப்பு ,திறன் மேம்பாடு மற்றும் ஃபேஷன் ஆகியவை குறித்து டிப்ஸ்களை வழங்கி வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா சதாவரிக்கு 8000 ஃபாலோவர்கள் இருக்கின்றனர.
யோகா செய்வது, தீபாவளி கொண்டாடுவது , பாரம்பரிய முறையில் உடை அணிந்திருப்பது, ஃபேஷனுக்கு ஏற்ப அப்டேட் செய்வது என சாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் பல புகைப்படங்களை பார்க்க முடியும்.
பார்ப்பதற்கு உண்மையான ஒரு பெண்மணி போலவே இந்த மாடல் இருப்பது தான் இத்தனை பேரின் கவனத்தை ஈர்க்க காரணம். தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் சவுத்ரி, உலகின் முதல் மிஸ் ஏஐ அழகி போட்டிக்கான பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக சாரா இடம் பிடித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரதிநிதியாக சாரா கலந்து கொள்வது மற்றும் ஆசிய பிரதிநிதியாக இந்த போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்து இருப்பது என்பது மிகவும் பெருமை தருவதாக கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதம் முதல் ஃபேன்வியூ இந்த போட்டியை நடத்தி வருகிறது. இரண்டு மனிதர்கள் மற்றும் இரண்டு ஏஐ நடுவர்கள் தான் முதல் 10 அழகிகளை தேர்வு செய்துள்ளனர். போட்டியில் முதலிடத்தை பிடிக்கும் மாடலுக்கு 20,000 டாலர் பரிசு வழங்கப்பட இருக்கிறது. குட்லக் சாரா!!
Story written by: Devika


Click it and Unblock the Notifications