ஊட்டியில் பணத்தை கொட்டும் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி..

ஊட்டி: தமிழ்நாட்டின் பிரபலமான மலைப்பிரதேசமாகவும், சுற்றுலா தளமாகவும் இருக்கமும் ஊட்டி-யில் பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் சிரஞ்சீவி, அண்மையில் ஊட்டியில் 6 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை வாங்கி இருக்கிறார்.

123 தெலுங்கு என்ற தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி மெகா ஸ்டார் என அழைக்கப்படக்கூடிய சிரஞ்சீவி 16 கோடி ரூபாய் கொடுத்து தமிழ்நாட்டின் ஊட்டியில் நிலம் வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடமானது தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியில் நல்ல வியூ பாய்ண்டில் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஊட்டியில் பணத்தை கொட்டும் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி..

அண்மைக்காலமாகவே பெரும்பாலான பிரபலங்களும் தொழில்துறை சார்ந்தவர்களும் ஊட்டியின் குறிப்பிட்ட இந்த பகுதியில் தான் அதிகமான முதலீட்டினை மேற்கொள்கிறார்களாம்.

இந்த இடத்தில் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆடம்பரமான ஃபார்ம் ஹவுஸ் ஒன்றை கட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் ராம்சரணின் மனைவி உபாசனா ஆகிய இருவரும் இந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு எந்த இடத்தில் எப்படி ஃபார்ம் ஹவுஸ் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்தியதாக தெரிகிறது. கூடிய விரைவில் இந்த ஃபார்ம் ஹவுஸ் கட்டுமான பணிகள் தொடங்க இருக்கின்றன. சிரஞ்சீவியினை பொருத்தவரை ரியல் எஸ்டேட் முதலீடுகளில் ஆர்வம் காட்டுபவர்.

ஏற்கனவே இவர் பெங்களூருவின் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே தேவனஹள்ளி பகுதியில் ஒரு ஃபார்ம்ஹவுஸை சொந்தமாக வைத்திருக்கிறார். இவர் அடிக்கடி விடுமுறை காலங்களில் குடும்பத்தினரோடு இந்த ஃபார்ம் ஹவுஸிற்கு சென்று பொழுது போக்குவார். சிரஞ்சீவி விஸ்வம்பரா என்ற மிகப்பெரிய சோசியோ - ஃபேண்டஸி படத்தில் நடித்து வருகிறார்.

மல்லிடி வசிஸ்தா இதனை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா ,குணால் கபூர், ஆசிகா ரங்கநாதன், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என அறியப்படுபவர் தான் சிரஞ்சீவி. 69 வயதாகும் சிரஞ்சீவி 1650 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இவர் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

இவர் 1990 களிலேயே ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் என்ற அதிகபட்ச சம்பளத்தை வாங்கியவர். இவரது மகன் ராம்சரணும் தற்போது முன்னணி நடிகராக உருவாகி இருக்கிறார். ராம்சரணின் மனைவி உபாசனா அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் பிரதாப் ரெட்டியின் பேத்தி ஆவார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+