பொதுவாக ஒரு ஆண்டில் அனைத்து மாதங்களிலும் திருமண விழாக்கள் நடைபெறும். இருப்பினும் குறிப்பிட்ட மாதங்களில் அதிகளவில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது வாடிக்கை. அந்த வகையில் தமிழ் மாதங்களான ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் அதிகளவில் கல்யாணங்கள் நடைபெறும்.
ஒரு ஆணும், பெண்ணும் இல்லற வாழ்க்கையில் அடிவைத்து வைப்பதற்கான ஒரு சடங்காக தான் நாம் திருமணங்களை பார்க்கிறோம். ஆனால் இந்த திருமணங்கள் சமூகத்தில் பெரிய பொருளாதாரத்தை உருவாக்கின்றன என்பது நமக்கு தெரிவதில்லை.

உதாரணமாக திருமணத்துக்காக நாம் நகைகள் மற்றும் ஆடைகள் வாங்குகிறோம், மண்டபம், சமையல், மேளம் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு செலவு செய்கிறோம். இன்றைய காலகட்டத்தில் எளிமையாக திருமணத்தை நடத்த வேண்டும் என்றால் கூட சில லட்சங்கள் செலவாகும்.
திருமணத்துக்காக நாம் மேற்கொள்ளும் செலவினங்கள் பலருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை கொடுக்கின்றன. ஒரு திருமணத்துக்கே சில லட்சங்கள் செலவாகும் போது, பல லட்சம் திருமணங்கள் நடைபெறும் ஒரு கல்யாண சீசனில் எவ்வளவு பணம் செலவாகும்?
எதிர்வரும் கல்யாண சீசனில் சுமார் 38 லட்சம் திருமணங்கள் இந்தியா முழுக்க நடைபெற உள்ளதாகவும் இதன் மூலம் சுமார் ரூ.4.74 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று ஒரு வர்த்தக அமைப்பு கணித்துள்ளது. கடந்த வருடம் இதேகாலக்கட்டத்தில் 32 லட்சம் திருமணங்கள் வாயிலாக 3.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை பதிவு செய்த நிலையில் இந்த வருடம் கூடுதலாக 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கண்டேல்வால் கூறுகையில், நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரையிலான 23 நாட்களில் சுமார் 38 லட்சம் திருமணங்கள் இந்தியா முழுவதும் நடைபெறும். இதன் மூலம் ரூ.4.74 லட்சம் கோடி மதிப்புக்கு இந்த ஆண்டு திருமண சார்ந்த வர்த்தகம் நடைபெறும் என்று CAIT India அமைப்பு கணித்துள்ளது. இந்த திருமண சீசன் வர்த்தக சமூகத்தினருக்கு மகிழ்ச்சியை கொண்டு வர தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் ரூ.3.75 லட்சம் கோடி செலவில் சுமார் 32 லட்சம் திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றது என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.பி.ஓ. இந்தியா நிறுவனம் கூறுகையில், இந்தியாவில் இந்த ஆண்டு சராசரி திருமண செலவு ரூ.5 லட்சமாக இருக்கும். கோவா, ஜெய்ப்பூர், கேரளா மற்றும் சிம்லா ஆகியவை திருமணத்துக்கான பிரபலமான இடங்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த வருட திருமண சீசனில் சுமார் 7 லட்சம் திருமணங்கள் ரூ.3 லட்சம் பட்ஜெட்டிலும், 8 லட்சம் திருமணங்கள் ரூ.6 லட்ச பட்ஜெட்டிலும், ரூ.10 லட்ச பட்ஜெட்டிலும் 10 லட்சம் திருமணங்களும், ரூ.15 லட்ச பட்ஜெட்டிலும் 7 லட்சம் திருமணங்களும், ரூ.25 லட்ச பட்ஜெட்டிலும் 5 லட்சம் திருமணங்களும், ரூ.25 லட்ச பட்ஜெட்டிலும் 50 ஆயிரம் திருமணங்களும், 50,000 திருமணங்களுக்கு ரூ.1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் நசக்கும் என CAIT எதிர்பார்க்கிறது.
உங்க திருமணத்தின் பட்ஜெட் என்ன மறக்காம கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications