இந்திய அரசியல் களத்தை அதிரவைத்த தேர்தல் பத்திரங்களில், சுமார் 966 கோடி ரூபாய் வாங்கிய இரண்டாவது பெரிய நன்கொடை செய்த நிறுவனமாக விளங்கும் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்டக்சர்ஸ் (MEIL) மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அந்நிறுவனம் தனது சிட்டி கேஸ் விநியோக வர்த்தகத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்டக்சர்ஸ் வாங்கிய 966 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில், பெரும் பகுதி முன்னணி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 10 வருடத்தில் சுரங்கம் அமைப்பது முதல் எலக்ட்ரிக் வாகனம் தயாரிப்பது வரையில் பல துறையில் பல முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி அசத்தியுள்ளது இந்த ஹைதராபாத்-ஐ சேர்ந்த நிறுவனம்.

மேகா சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் (MCGDPL) என்பது மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்டக்சர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை மூட திட்டமிட்ட நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்திரப்பிரஸ்த கேஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களை அணுகியுள்ளது.
"இந்த நிறுவனங்கள் தற்போது MEIL நிறுவனத்தின் கோரிக்கையை ஆய்வு செய்வது மட்டும் அல்லாமல் மேகா சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் மதிப்பீடு செய்து வருகின்றன. ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று இத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேகா சிட்டி கேஸ் நிறுவனத்தின் சொத்துக்களை மதிப்பீடு செய்த மற்றொரு துறை அதிகாரி கூறுகையில், இந்நிறுவனம் இதுவரை பெரிதாக இதில் முதலீடோ வரிவாக்கமோ செயல்படவில்லை என்றும், இதன் மதிப்பு ரூபாய் 1,000 கோடி முதல் ரூபாய் 2,000 கோடி வரை இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதுவரையில் மேகா சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன், மேகா இன்ஜினியரிங், ஐஓசிஎல், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் மற்றும் ஐஜிஎல் ஆகிய நிறுவனங்கள் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்டக்சர்ஸ் (MEIL) நிறுவனம் ஹைட்ரோகார்பன்ஸ், மின்சார கட்டமைப்பு, மின்சார பேருந்துகள், பாதுகாப்பு, மின்சாரம், போக்குவரத்து மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள மாபெரும் உள்கட்டமைப்பு நிறுவனமாகும்.
பொதுவாக அதுபோன்ற பெரிய நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விற்பனை செய்யும் போது சக போட்டி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது வழக்கம். உதாரணமாக, அம்பானி - பிர்லா குழுமத்திற்கு மத்தியில் பல வர்த்தகம் இதுபோன்று நடந்துள்ளது. ஆனால் மேகா இன்ஜினியரிங் அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை நாடியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டி கேஸ் விநியோக திட்டத்தில் அதானி குரூப், டோரென்ட் குரூப் போன்ற பிரபலமான தனியார் நிறுவனங்கள் இருக்கும் வேளையில் ஐஓசிஎல், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் மற்றும் ஐஜிஎல் ஆகிய நிறுவனங்களுக்கு இதன் வர்த்தகத்தை வாங்க கோரிக்கை விடுத்துள்ளது மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்டக்சர்ஸ் (MEIL) நிறுவனம்.
மேலும் மேகா இன்ஜினியரிங் தனது சிட்டி கேஸ் வர்த்தகத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளதாக தகவல் இதுவரையில் வெளியாகவில்லை, மேகா இன்ஜினியரிங் நிறுவனமும் அறிவிக்கவில்லை.
2015 ஆம் ஆண்டு "மேகா கேஸ்" என்ற பெயரில் சிட்டி கேஸ் விநியோக வர்த்தகத்தைத் தொடங்கிய இந்த நிறுவனம், நிதியாண்டு 2022 வரை MEIL என்ற பெயரிலேயே இயங்கி வந்தது.
செப்டம்பர் 2022 இல், 10 மாநிலங்களின் 62 மாவட்டங்களில் சிட்டி கேஸ் விநியோக நெட்வொர்க்-ஐ அமைப்பதற்கான உரிமங்களை கொண்டிருந்த மேகா சிட்டி கேஸ் நிறுவனத்திற்கு, மேகா இன்ஜினியரிங் நிறுவனம் இந்த வர்த்தகத்தை மாற்றியது.
இந்தியாவில் சிட்டி கேஸ் விநியோக திட்டம் மிகப்பெரிய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கொண்டிருக்கும் வேளையில், இதில் ஈர்க்கப்பட்ட பல நிறுவனங்கள் தீவிரமான போட்டியில் ஏல விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தன. இதில் மேகா இன்ஜினியரிங் நிறுவனமும் ஒன்று.
ஆனால் இந்த துறையில் அதிகப்படியான முதலீடுகள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் மேகா இன்ஜினியரிங் குறைந்தபட்ச பணியை மட்டுமே பூர்த்தி செய்வதுள்ளது. இதற்கிடையில் இத்துறையில் இருந்து வெளியேற முடிவு செய்து விற்பனை செய்யும் நிலைக்கு மேகா இன்ஜினியரிங் வந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications