இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பதோடு, அதை தயாரிக்கவும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. எலக்ட்ரிக் கார்களின் விலை இந்திய மக்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் வேளையில் இதை சரி செய்ய பல முயற்சிகளை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இதை எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் நிறுவனங்கள் எளிதாக செய்ய முடியும். இந்த நிலையில் சீனாவின் BYD இந்தியாவில் தனது கார்களை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் கணிசமான நம்பிக்கையை கொடுத்திருக்கும் வேளையில் அடுத்தக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் முன்னணி இன்பரா மற்றும் உற்பத்தி நிறுவனமான மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்பரா நிறுவனம் BYD நிறுவனத்தில் Atto 3 மற்றும் E6 எலக்ட்ரிக் கார்களை அசம்பிள் செய்யும் திட்டத்திற்காக பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது.
இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 100 சதவீதம் வரையில் வரி விதிக்கப்படுகிறது. இப்படியிருக்கையில் உதிரிபாகங்களாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அசம்பிளி செய்யப்படும் கார்களுக்கு வரி மிகவும் குறைவு. உதாரணமாக பாதி தயாரிக்கப்பட்ட கார்களுக்கு 35 சதவீதமும், உதிரிபாகங்களாக வரும் கார்களுக்கு (CKD) 15 சதவீதம் மட்டுமே வரி.
மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்பரா நிறுவனம், சீனாவின் BYD உடனான பேச்சுவார்த்தையில் வெற்றிபெற்றால் சுமார் 25000 கார்களை தயாரித்து அதன் விற்பனை எண்ணிக்கையை 75000 ஆக உயர்த்த முடியும். BYD - Megha Engineering கூட்டணி இந்தியாவில் 8000 கோடி முதலீடு செய்ய அனுமதிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது.
சீனாவில், எலான் மஸ்க்-ன் டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பு, விற்பனை என அனைத்திலும் நேருக்கு நேர் போட்டிப்போட்டு வரும் BYD நிறுவனம் பெரும் ஆதிக்கத்தை கொண்டு உள்ளது. BYD அதிரடி ஆட்டத்தால் எலான் மஸ்க் பல முறை சீனாவில் தனது எலக்ட்ரிக் கார்களின் விலையை குறைத்துள்ளார்.
இந்த நிலையில் BYD நிறுவனம் தமிழ்நாட்டில் மட்டும் 3 தொழிற்சாலைகளை கொண்டு இந்தியாவில் 2 கார்களை அறிமுகம் செய்து சிறிய அளவிலான எலக்ட்ரிக் வாகன சந்தை வர்த்தகத்தை கொண்டு உள்ளது.
சீனா-வின் BYD நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கவும், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை தயாரிக்கவும் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய மத்திய அரசிடம் விண்ணப்பம் கொடுத்தது.
இந்த விண்ணப்பத்தில் BYD மற்றும் ஹைதராபாத் மேகா இன்ஜினியரிங் & இன்பராஸ்டக்சர் ஆகியவை 50:50 என்ற அடிப்படையில் இணைந்து 1 பில்லியன் டாலர் முதலீட்டை முன் வைத்தது. ஆனால் இதற்கு DPIIT அமைப்பு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, காரணம் சீனாவின் முதலீடு.
BYD கூட்டணியில் மேகா இன்ஜினியரிங் & இன்பராஸ்டக்சர் நிறுவனம் Olectra Greentech Ltd கீழ் எலக்ட்ரிக் பஸ்-களை தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications