அஸ்ட்ரானமியின் டார்வின் என்றழைக்கப்படும் விஞ்ஞானி மேக்நாத் சாஹா 1893 ஆம் ஆண்டில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தார். சமூக முட்டுக்கட்டைகளையெல்லாம் உடைத்து எறிந்து விட்டு அவர் இந்தியாவின் முதல் ஆஸ்ட்ரோபிசிஸ்ட் ஆனார்.
1900களில் அவர் வெறும் காலில் ரோட்டில் நின்று கொண்டு வங்காளத்தை மத அடிப்படையில் பிரிட்டிஷார் பிரிப்பதற்கு எதிர்த்துப் போராடினார். இதனால் அவர் பள்ளியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
பல்வேறு தடைகளையும் கடந்து சாஹாவின் சாதனைப் பயணம் பல்வேறு அற்புதமான விஞ்ஞானக் கண்டுப்பிடிப்புகளையும் சமூக பாதிப்புகளையும் ஏற்படுத்தியது.

இயற்பியலில் சாஹாவின் மகத்தான கண்டுபிடிப்பு காஸ்மோஸ்களை அறிந்து கொள்ள உதவியது. 1920 ஆம் ஆண்டில் அவரது சாஹா ஐயனிசேஷன் ஈக்குவேஷன் உருவானது. அது இன்று வரை ஆஸ்ட்ரோ பிசிக்ஸில் விஞ்ஞானிகள் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளிக்கற்றைகளின் தன்மை குறித்து பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.
ஒளியின் தன்மை, வெப்பநிலையை வைத்து பல புதிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது கண்டுப்பிடிப்புகளை கண்டு வியந்து நோபல் பரிசு-க்கு பல முறை பரிந்துரைக்கப்பட்டும் சாஹாவுக்கு கிடைக்கவில்லை.
சமூகப் பாகுபாடு பரவலாக இருந்த ஒரு காலத்தில், டாக்கா மற்றும் கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் அவர் சாதிய பாரபட்சத்தையும் தொடர்ச்சியான சவால்களையும் எதிர்கொண்டார்.
இவை அனைத்தையும் மீறி, அவர் வானியல், வேதியியல் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் சிறந்து விளங்கினார். ஐன்ஸ்டீனின் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
அவரது பங்களிப்புகள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் நட்சத்திர வகைப்பாடு தரவுத்தளத்தை மறுசீரமைப்பதில் விரிவடைந்தது. நட்சத்திரங்களின் கலவை பற்றிய வழக்கமான நம்பிக்கைகளை தகர்த்தது. அறிவியலுக்கு அப்பால், சாஹாவுக்கு இந்தியாவில் அறிவியல் கல்வியறிவை மேம்படுத்துவதில் ஆர்வம் இருந்தது.
1930கள் மற்றும் 40 களில், நாட்டின் கல்வித் துறையில் நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்ற அறிவியல் சமூகங்கள் மற்றும் பத்திரிகைகளை நிறுவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
மேகநாத் சாஹாவின் ஆர்வம் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றது. 1951 இல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கல்வி, சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். அவர் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தின் தலைமை கட்டடக் கலைஞராகவும் கருதப்படுகிறார்.
பிப்ரவரி 16, 1956 அன்று, திட்டக் கமிஷன் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில், அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு பாரம்பரியத்தை மேகநாத் சாஹா விட்டுச் சென்றார்.


Click it and Unblock the Notifications