இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருக்கும் டாடா குழுமம் 100க்கும் அதிகமான நிறுவனங்களுடன் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் நிலையில் கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் அடுத்தத் தலைமுறைக்கு அதிகாரத்தை வழங்குவது குறித்து முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது.
ஒருபக்கம் டாடா குழும நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிர்வாகப் பதவி டாடா குடும்ப உறுப்பினருக்கு வெளியில் சென்ற நிலையில், டாடா டிரஸ்ட் அமைப்புகளின் நிர்வாகம் தொடர்ந்து டாடா குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டாடா டிர்ஸ்ட் அமைப்பில் புதிய டிரஸ்டியாக ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
டாடா குழுமம்
டாடா குழுமத்தில் டாடா குடும்பத்தைத் தாண்டி அதிகப் பங்குகளை வைத்திருப்பது மிஸ்திரி குடும்பம் தான் என அனைவருக்கும் தெரியும். மிஸ்திரி குடும்பம் டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
பலோன்ஜி மிஸ்திரி, சைரஸ் மிஸ்திரி
இந்நிலையில் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவரும், நாட்டின் முக்கியப் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான பலோன்ஜி மிஸ்திரி தனது மும்பை வீட்டில் 93வது வயதில் ஜூன் 28 ஆம் தேதி மறைந்தார். இதைத் தொடர்ந்து வெறும் 3 மாதத்திற்குள் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் செப்டம்பர் 4, 2022ல் உயிரிழந்தார்.
மெஹ்லி மிஸ்திரி
மிஸ்திரி குடும்பத்தில் இரு முக்கியமான நபர்களும் மறைந்த நிலையில் டாடா டிரஸ்ட் தனது நிர்வாகத்தைப் பலப்படுத்த 62 வயதான மெஹ்லி மிஸ்திரி-ஐ சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்புகளில் டிரஸ்டியாகச் சேர்த்துள்ளது.
டாடா டிரஸ்ட் சிஇஓ
டாடா டிரஸ்ட் அமைப்பு 2020ல் முதல் முறையாகச் சிஇஓ பதவியில் ஸ்ரீநாத் நரசிம்மன் நியமிக்கப்பட்டார், இவர் ஓய்வு பெறுவதாக அறக்கட்டளை அறிவித்த நிலையில் புதிதாக மெஹ்லி மிஸ்திரி டிரஸ்டி குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேபோல் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரிக்கான தேடல் குழுமத்திற்குள் மற்றும் வெளியில் நடந்து வருகிறது.
யார் இந்த மெஹ்லி மிஸ்திரி..?
பிரிட்டன் நாட்டவரும், ரத்தன் டாடா-வின் நம்பிக்கைக்கு உரியவருமான மெஹ்லி மிஸ்திரி, டாடா டிரஸ்ட் அமைப்பில் சேருவார் என்ற கணிப்புகள் இருந்தது. மெஹ்லி மிஸ்திரி-யின் தாயாரும், மறைந்த சைரஸ் மிஸ்திரியின் தாயாரும் சகோதரிகள். மெஹ்லி மிஸ்திரி மற்றும் சைரஸ் மிஸ்திரி ஒரு குடும்பமாக இருந்தாலும் நெருங்கியவர் இல்லை.
மெஹர்ஜி பல்லோன்ஜி குழுமம்
மெஹ்லி மிஸ்திரி பிரிட்டன் நாட்டில் மெஹர்ஜி பல்லோன்ஜி குழுமம் பெயரில் 12க்கும் அதிகமான நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகிறார். இந்தியாவில் இருக்கும் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் தனி, மெஹர்ஜி பலோன்ஜி குழுமம் தனி.
டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்
டாடா குழுமம் சில மாதங்களுக்கு முன்பு தனது நிர்வாக முறையில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதாவது ஓரே நபர் குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் மற்றும் அதன் மிகப்பெரிய பங்குதாரர் நிறுவனமான டாடா டிரஸ்ட்-க்கு தலைவராக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் அமைப்பின் ஆர்டிகிள் 118 இன் திருத்தம் செய்யப்பட உள்ளது.
ரத்தன் டாடா
இதன் மூலம் டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட் ஆகிய இரு அமைப்புக்கும் தலைவராக இருந்த கடைசி நபர் ரத்தன் டாடா. இதன் மூலம் சந்திரசேகரன் டாடா டிரஸ்ட் அமைப்புக்குள் வர முடியாது. இதன் மூலம் டாடா டிரஸ்ட்-ல் தொடர்ந்து டாடா குடும்பம் ஆதிக்கம் செலுத்தும்.
டாடா சன்ஸ்
டாடா குழுமத்தில் இருக்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் மொத்த ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனம். டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகளை டாடா டிரஸ்ட்ஸ் வைத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications