டாடா டிரஸ்ட் மோதல்: யாரும் பெரியவர்கள் அல்ல என நோயல் டாடாவுக்கு கடிதம் எழுதிய மெஹ்லி மிஸ்திரி!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம் டாடா குழுமம். இந்த தொழில் குழுமம் கால் பதிக்காத துறையே இல்லை, அப்படி எந்த துறையில் கால் பதித்தாலும் வெற்றி வாகை தான் சூடுவார்கள். டாடா குழும நிறுவனங்கள் என்றாலே உலகம் முழுவதும் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் அதன் தலைவராக இருந்த ரத்தன் டாடா.

ரத்தன் டாடா எப்போதுமே பொதுநலனில் அக்கறை செலுத்துபவர். கடந்த ஆண்டு ரத்தன் டாடா திடீரென மறைந்தார். ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு டாடா குழுமத்தின் நிர்வாகத்தில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக டாடா அறக்கட்டளையின் அறங்காவலர்களுக்கு இடையே அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது.

டாடா டிரஸ்ட் மோதல்: யாரும் பெரியவர்கள் அல்ல என நோயல் டாடாவுக்கு கடிதம் எழுதிய மெஹ்லி மிஸ்திரி!!

டாடா குழும நிறுவனங்களில் அதிக பங்கு கொண்டதாகவும் அதிகாரப்பூர்வ அமைப்பாகவும் டாடா அறக்கட்டளைகள் எனப்படும் டாடா டிரஸ்ட் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக நோயல் டாடா செயல்படுகிறார். இந்த அறக்கட்டளையில் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவரும் மிஸ்திரி குடும்பத்தை சேர்ந்தவருமான மெஹ்லி மிஸ்திரி முக்கிய அறங்காவலராக செயல்படுகிறார். ஆனால் நோயல் டாடா , மெஹ்லி மிஸ்திரிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். இதனால் அறக்கட்டளையில் அடிக்கடி கருத்து மோதல்கள் நிலவின.

இத்தகைய சூழலில் தான் மெஹ்லி மிஸ்திரியின் அறங்காவலர் பதவியை நீட்டிப்பது தொடர்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன. நோயல் டாடா, விஜய் சிங் , வேணு சீனிவாசன் ஆகியோர் மெஹ்லி மிஸ்திரியின் பதவி காலத்தை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தனர் . டாடா அறக்கட்டளை நிர்வாக விதிமுறைகளின் படி அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவு தந்தால் மட்டுமே ஒரு அறங்காவலரின் பதவிக்காலம் என்பது நீட்டிக்கப்படும் .

இத்தகைய சூழலில் டாடா அறக்கட்டளையில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய நோயல் டாடா , வேணு சீனிவாசன் , விஜய் சிங் ஆகியோரே மெஹ்லி மிஸ்திரி பதவிக்கால நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவர் அறக்கட்டளையிலிருந்து வெளியேற்றப்படுவார் என சொல்லப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் டாடா அறக்கட்டளை அறங்காவலர் பொறுப்புகளில் இருந்து வெளியேறுவதாக மெஹ்லி மிஸிதிரி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய முடிவு குறித்து டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா மற்றும் பிற அறங்காவலர்களுக்கு மெஹ்லி மிஸ்திரி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் டாடா அறக்கட்டளை அறங்காவலர்கள் ரத்தன் டாடாவின் தொலைநோக்கு பார்வையை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கும் மெஹ்லி மிஸ்திரி, அறங்காவலர் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்திருக்கிறார். டாடா அறக்கட்டளைகள் சர்ச்சையில் சிக்காமல் இருப்பதையும், டாடா அறக்கட்டளைகளின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் நிகழாமல் தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

ரத்தன் டாடா எப்பொழுதுமே சுயநலம் பாராமல் பொது நலனை தான் முதன்மையாக கருதுவார், டாடா அறக்கட்டளை அறங்காவலர்கள் ரத்தன் டாடாவின் வெளிப்படை தன்மை , சிறந்த நிர்வாகம், பொதுநலன் ஆகிய கொள்கைகளை மனதில் கொண்டு இந்த அறக்கட்டளையை வழி நடத்துவார்கள் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ரத்தன் டாடா என்னிடம் கூறிய ஒரு வார்த்தையை உங்களிடம் பகிர விரும்புகிறேன் அது "சேவை செய்யும் நிறுவனத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல" என அந்த கடிதத்தில் அவர் எழுதியிருக்கிறார்.

டாடா குழுமம் 400 நிறுவனங்களையும் 30 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றை நிர்வகிக்கும் அமைப்பு தான் டாடா சன்ஸ். இது தான் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனம் ஆகும். இந்த டாடா சன்ஸ் அமைப்பில் டாடா குழும அறக்கட்டளைகள் தான் 66% பங்குகளை கொண்டுள்ளன. எனவே டாடா அறக்கட்டளையில் நிகழும் எந்த ஒரு மாற்றமும் அனைத்து டாடா நிறுவனங்களிலும் நிர்வாகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த கூடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+