உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனது காதல் மனைவியான மெலிண்டா கேட்ஸ்-ஐ 27 வருடத்திற்குப் பின்பு விவாகரத்துச் செய்ய முடிவு செய்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
இவர்களின் விவாகரத்துக்குப் பின் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பெரிய அளவில் வெளியுலகத்திற்கு வராத நிலையில் மெலிண்டா தனது விவாகரத்து குறித்தும், விவாகரத்துக்குக் காரணத்தையும் CBS பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா விவாகரத்து அறிவித்த நாளில் இருந்து அவர்களைச் சுற்றி எப்போதும் இருக்கும் ஒரு முக்கியமான கேள்வி விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது தான். இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் பில்கேட்ஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பது மட்டும் அல்லாமல், 27 வருட திருமண வாழ்க்கையில் இருந்து 66 வயதில் விவாகரத்து பெற வேண்டிய கட்டாயம் என்ன என்பது தான்.
கள்ளத்தொடர்பு
இந்நிலையில் இந்தக் கேள்விக்குத் தற்போது மெலிண்டா தடாலாடியாகப் பதில் அளித்துள்ளார். CBS This Morning என்ற நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் உடன் 20 வருடத்திற்கு முன்பு கள்ள தொடர்பு இருந்தது அவர் ஒப்புக்கொண்டது மட்டும் அல்லாமல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விசாரணையும் உறுதி செய்யப்பட்டது.
பில் கேட்ஸ்
இந்நிலையில் இந்தப் பேட்டியில் பில் கேட்ஸ் ஒன்றுக்கும் அதிகமான முறை திருமணமான பின்பு கள்ள தொடர்பில் இருந்தாரா என்ற கேள்வி கேட்டபோது. மெலிண்டா சில நிமிடம் மௌனம் காத்து மிகவும் யோசித்து, இதற்குப் பில் கேட்ஸ் தான் உண்மையான பதிலை சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
பில் கேட்ஸ் - ஜெஃப்ரி எப்ஸ்டீன்
இதன் மூலம் பில் கேட்ஸ் மெலிண்டா-வை திருமணம் செய்த பின்பு ஒன்றுக்கும் அதிகமான முறை பலருடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இதேபோல் பில் கேட்ஸ் - ஜெஃப்ரி எப்ஸ்டீன் மத்தியிலான நட்பு மெலிண்டா-வை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த டெக் உலகையும் அதிர வைத்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications