இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்படுவதாக பல நாட்களாக பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில், மக்கள் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போன நிலையில் இன்று காலை இந்தியாவின் பெயரை பாரத் என ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்கள் இடம்பெற்று இருந்தது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.
இந்த செய்தி டிவிட்டரில் காட்டுத்தீ போல பரவிய நிலையில் பலர் கடுமையான கருத்துக்களை முன்வைத்த நிலையில், பலர் வழக்கம் போல் இந்த விஷயத்தையும் மீம் போட்டு கலாய்க்க துவங்கியுள்ளனர். இதனால் இந்திய டிரென்டிங்கில் பாரத் என்ற ஹேஷ்டேக் கீழ் பல மீம்கள் டிரெண்டான நிலையில் அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

டிவிட்டரில் பிரபல செய்தியாளரான முகமது ஜூபைர் தனது டிவிட்டரில் இந்தியா டுடே பத்திரிக்கையாளர் பாரத் பெயர் மாற்றம் குறித்த தகவல் பதிவிட்ட நிலையில் முகமது ஜூபைர், இந்தியா டுடே பத்திரிக்கை பெயரை கூட மாற்ற முடியாது பாரத் டுடே என்ற பெயர் ஏற்கனவே எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது என பெயர் மாற்றத்தில் வரும் பிரச்சனைகளை கிண்டலாக தெரிவித்தார்.

ஒட்டுமொத்த இந்திய மக்களும், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்படுகிறது குறித்து யோசித்து வரும் வேளையில் ஒரு நிறுவனம் மட்டும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. BPCL பாரத் பெட்ரோலியம்..

இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்டால் என்னாகும்.
இந்தியா - பாரதம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - பாரத் பிரீமியர் லீக் (பிபிஎல்)
இந்திய ரூபாய் (INR) - பாரத ரூபாய் (BR)
இந்திய நிலையான நேரம் (IST) - பாரத் நிலையான நேரம் (BST)
இந்தியப் பெருங்கடல் - பாரதப் பெருங்கடல்
இந்திய விமானப்படை - பாரத் விமானப்படை
இந்திய ராணுவம் - பாரத ராணுவம்

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் பெயர் பார்தான் 2 என மாற்றப்படும் என கிண்டலாக திரைப்பட துறை விமர்சகர் மனோபாலா தெரிவித்தார்

இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்டால் IIM பட்டதாரிகள் இனி BHIM பட்டதாரிகள் என அழைக்கப்படுவார்கள் என ராகுல் என்பவர் டிவீட் செய்துள்ளார். BHIM என்பது அரசு உருவாக்கிய upi பேமெண்ட் தளம்.
பாரத்தின் குடிமக்கள் இனி பாரதியார்கள் என அழைக்கப்படுவார்கள் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்டால் இனி இண்டிகோ நிறுவனம் பாகோ என அழைக்கப்படும் என சுப் என்பவர் டிவீட் செய்துள்ளார். அப்போ ஏர் இந்தியா ஏர் பாரத் ஆக மாறுமா..?

இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்டால்

பாரத் ப்ரீமியர் லீக்
பாரத் அணி கேப்டன் ரோகித்
பாரத் சுதந்திர போராட்ட வீரர்கள்
My country is Bharat
பாரத் கிரிக்கெட் டீம் - இதற்கு சூரி ரியாக்ஷன் உடன் டிவீட் செய்துள்ளார் ஒரு நெட்டிசன்

More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications