மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் இந்த கூட்டணி மூலம் மிகவும் மேம்படுத்தப்பட்ட கார் உற்பத்தி திறனை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் - மைக்ரோசாப்ட்
மெர்சிடிஸ் பென்ஸ் கார் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இணைந்துள்ளதை அடுத்து மைக்ரோசாப்ட் கிளவுட் அமைப்பை பயன்படுத்தி கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் உலக அளவில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் கார் தயாரிக்கும் ஆலைகளை வைத்துள்ள நிலையில் இந்த ஆலைகளில் கார் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
MO360 டேட்டா தளம்
MO360 எனப்படும் டேட்டா தளம் ஏற்கனவே ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் நிலையில் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனமும் இந்த டேட்டாவை பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
துல்லியம்
இந்த ஒப்பந்தம் மூலம் கார் உற்பத்தி விர்ச்சுவல் மூலம் உருவாக்க மைக்ரோசாப்ட் உதவி செய்யும் என்றும், இதன் காரணமாக இனி தயாரிக்கப்படும் காரின் தளவாடங்கள் முதல் அசெம்பிளி வரை துல்லியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒப்பந்தம்
2022ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதன் காரணமாக மெர்சிடிஸ்-பென்ஸ் வாகன உற்பத்தி திறன் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சொகுசு கார்கள்
மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் அனைத்து ஆலைகளிலும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பம் இணைக்கப்படும் என்பதால் இதன் காரணமாக குறைந்த உமிழ்வு மற்றும் டாப்-எண்ட் சொகுசு வாகனங்கள் உருவாக்கப்படும் என தெரிகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications