இந்தியாவில் சொகுசு கார்களை விற்கும் முன்னணி கம்பெனியான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் செப்டம்பர் 2020 காலாண்டு விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), செப்டம்பர் காலாண்டில் (ஜூலை 2020 - செப்டம்பர் 2020) 2,058 வாகனங்களை விற்று இருக்கிறார்களாம்.
இது முந்தைய செப்டம்பர் 2019 காலாண்டில் செய்த விற்பனையை விட 38.64 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தாக்கம்
கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் (ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2019) 3,354 வாகனங்களை மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) விற்று இருந்தார்களாம். இப்போதைக்கு விற்பனை வீழ்ச்சி கண்டு இருந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து, மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) விற்பனை மீண்டு வருவதாகச் சொல்லி இருக்கிறது கம்பெனி தரப்பு.
ஆன்லைன் விற்பனை
இந்த செப்டம்பர் காலாண்டில் விற்பனை ஆன மொத்த மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) வாகனங்களில் சுமாராக 20 சதவிகித விற்பனை ஆன்லைன் புக்கிங் வழியாக வந்ததாம். 2025-ம் ஆண்டுக்குள் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) கம்பெனி இந்தியாவில் விற்கும் மொத்த கார்களில் ஒரு கணிசமான அளவு கார்கள், ஆன்லைன் வழியாக விற்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறது.
பண்டிகை கால விற்பனை
இந்தியாவில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தசரா, தீபாவளி, நவராத்திரி என பல பண்டிகைகள் வரிசை கட்டி வர இருக்கின்றன. எனவே இந்த அக்டோபர் 2020 முதல் டிசம்பர் 2020 வரையான கால கட்டத்தில், அதாவது டிசம்பர் 2020 காலாண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz)-ன் விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.
ஒன்பது மாத விற்பனை
2020-ம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையான ஒன்பது மாதங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) 5,007 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டில், ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையான ஒன்பது மாதங்களில் 9,951 வாகனங்களை விற்று இருக்கிறார்களாம். இது 49.5 சதவிகிதம் விற்பனை சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications