இந்திய சாலைகளும், கார்களும் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நிலையில் சாலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. டிராபிக் அதிகமாக இருக்கும் போது எவ்வளவு வேமகாகச் செல்ல கூடிய காராக இருந்தாலும் வேஸ்ட் தான்.
இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது புனேவில் நடந்துள்ளது. அதுவும் யாருக்கு நடந்துள்ளது என்பது தான் மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது.
மெர்சிடீஸ் பென்ஸ்
புனே நகரத்தின் பிசியான சாலையில் மெர்சடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ-வின் எஸ் கிளாஸ் கார் டிராபிக் ஜாம்-ல் சிக்கியுள்ளது. இதில் பொறுமை இழந்த மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ செய்த காரியம் தான் தரமான சம்பவம்.
சிஇஓ Martin Schwenk
மெர்சடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ Martin Schwenk டிராபிக்-ல் சிக்கியதால், நீண்ட நேரம் எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் ஓரே இடத்தில் மாட்டிக்கொண்டு உள்ளது. வெகு நேரம் காத்திருந்து கடுப்பான Martin Schwenk காரை விட்டு வெளியேறினார்.
ஆட்டோ
இதன் பின்பு ஒரு கிலோமீட்டர் வரையில் நடந்த Martin Schwenk அதன் பின்பு காலியாக இருந்த சாலையில் ஆட்டோ பிடித்துச் சென்றுள்ளார். இதை Martin Schwenk தனது இன்ஸ்டாகிராம் தளத்திலும் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு தான் தற்போது இணையத்தில் வைராலாகியுள்ளது.
ஆட்டோ ரிக்ஷா
இந்த நிகழ்வு குறித்து Martin Schwenk தனது இன்ஸ்டா பதிவில் அற்புதமான புனே சாலைகளில் உங்கள் S-கிளாஸ் கார் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டால் - நீங்கள் என்ன செய்வீர்கள்? காரில் இருந்து இறங்கி, சில கி.மீ தூரம் நடக்க ஆரம்பித்து, பிறகு ஆட்டோ ரிக்ஷாவைப் பிடிக்கலாமா? என்று பதிவிட்டு உள்ளார்.
கஜினி படம்
Martin Schwenk பதிவுக்குச் சுமார் 1000த்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளது மட்டும் அல்லாமல் பலர் கமெண்ட் செய்துள்ளனர். இதில் சிலர் ஆட்டோவில் சென்ற அனுபவம் எப்படி இருந்தது என்றும், இந்த நிகழ்வு கஜினி படத்தில் ஒரு காட்சியை நினைவுக்கு வருகிறது எனக் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications