உலகின் முன்னணி டெக் மற்றும் சமுக வலைத்தள நிறுவனமாந மெட்டா கடந்த 4 வருடத்தில் தனது வர்த்தகம் வாடிக்கையாளர் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. கொரோனா தொற்று காலத்தில் டிக்டாக் ஆதிக்கத்தால் பெரும் வாடிக்கையாளர் கூட்டத்தை இழந்தது பேஸ்புக்.
இதை தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் கீழ் இருக்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தொடர்பான ரகசிய விபரங்களை அதன் ஊழியர் ஒருவர் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் குழந்தைகள் மனநிலை பாதிப்பதாகவும், இதை தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சனையும் எழுந்தது.

அனைத்தையும் விட முக்கியமாக மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டாவெர்ஸ் தளத்தில் முதலீடு செய்த பெரும் தொகை வீண் ஆனது, முதலீட்டாளர்கள் மத்தியிலும், அதன் வாடிக்கையாளர் மத்தியிலும் நம்பிக்கையை இழந்தது. இங்கு துவங்கிய நிதியியல் மற்றும் வருமான பிரச்சனை கொத்துக்கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் கிளெக், ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியிலான சந்திப்பின் போது நிர்வாகம் அடுத்த பணிநீக்க சுற்றுக்கு தயாராகியுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரும் என்று தெரிவித்துள்ளார். இது டெக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Meta நிறுவனத்தின் சிஇஓ-வான மார்க் ஜூக்கர்பெர்க் மே 2023 இல் அடுத்த கட்ட பணிநீக்கங்கள் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவித்த நிலையில் நிக் கிளெக்-ன் இந்த அறிவிப்பு புதிதாக இல்லை என்றாலும், சந்தையில் இந்த பணிநீக்க சுற்று நடைபெறாது என கணிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நிக் கிளெக்-ன் பேச்சு மூலம் அடுத்த பணிநீக்கம் உறுதியானது மட்டும் அல்லாமல் மெட்டாவின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதும் உறுதியாகியுள்ளது. மெட்டா நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் முன்பே நிக் கிளெக்-ன் அறிவிப்பு மெட்டா ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த வாரம் முதல் மெட்டா நிறுவனத்தில் இருந்து 6,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா நிறுவனம் நவம்பர் 2022ல் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும், மார்ச் 2023 இல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
மார்ச் அறிவிப்புக்கு பின்பு 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா நிர்வாகம் மீதமுள்ள 6000 ஊழியர்களை மே மாதம் கடைசி வாரத்தில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications